கைகழுவலும் நன்றிக்கடனும்!!

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் குறிப்­பி­டு­வ­தைப்­போன்று இங்கு எந்­த­வொரு இர­க­சிய முகா­மும் இல்லை. அங்கு எவ­ரும் தடுத்து வைக்­கப்­ப­ட­வும் இல்லை என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­ வித்­துள்­ளார்.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் இழப்பை, அவர்­க­ளின் பெற்­றோ­ருக்கு செய்­யும் நிதி­யு­த­வி­யின் மூலம் ஈடு­செய்­து­வி­ட­லாம் என்­னும் வித­மா­க­வும் குறிப்­பிட்­டுள் ளார் அவர்.

யாழ்ப்­பா­ணம் மாந­க­ர­சபை மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யில் இந்­தத் தக­வலை மைத்­திரி வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பில் உண்­மைத்­தன்­மை­யு­டைய வெளிப்­ப­டுத்­தல்­கள் தமக்கு அவ­சி­யம் என்று வலி­யு­றுத்தி அவர்­க­ளின் உற­வி­னர்­கள் தமி­ழர் தாய­கத்­தில் தொடர்ந்து போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­டு­வ­ரும் நிலை­யில், அரச தலை­வ­ரின் இந்த அழுத் தம் திருத்­த­மான கருத்து வெளிப்­ப­டுத்­தல், காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் அத்­தி­யா­யம் எந்­த­வி­த­மான சாத­க­மான முன்­ன­கர்த்­த­லும் இல்­லா­மல் முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது என்­ப­தையே வெளிப்­ப­டுத்தி நிற்­கி­றது.

கடந்த 2016ஆம் ஆண்டு தேசிய தைப்­பொங்­கல் விழா­வுக்­காக யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்த தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் என்று குறிப்­பி­டப்­ப­டும் எவ­ரும் உயி­ரு­டன் இல்லை என்று அப்­பட்­ட­மாக தெரி­வித்­தி­ருந்­தார். இரண்டு வரு­டங்­கள் பின்­ன­தாக தலைமை அமைச்­ச­ரின் கருத்­துக்கு ஒப்பான சாரப்­பட தனது கருத்தை, நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன.

தன்னை ‘நல்­லாட்சி’ என்று கூறிக்­கொண்டு ஆட்­சிபீ­டம் ஏறிய மைத்­திரி – ரணில் கூட்­டு­அ­ர­சும், சிறு­பான்மை மக்­க­ளின் விட­யங்­க­ளில் முன்­னைய ஆட்­சி­க­ளில் இருந்து பெரி­ய­ அள­வில் வேறு­பட்­டி­ருக்­க­வில்லை என்­ப­தற்கு மற்­றொரு ஆகச் சிறந்த எடுத்­துக்­காட்­டாக இந்­தக் கைக­ழு­வல்­கள் அமைந்­துள்­ளன. வடக்­கில் எவ­ரும் காணா­மல் ஆக்­கப்­ப­ட­வில்லை என்று மைத்­திரி குறிப்­பி­ட­வில்லை.

தலைமை அமைச்­ச­ரும் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் எவ­ரும் தற்­போது உயி­ரு­டன் இல்லை என்று குறிப்­பிட்­டி­ருந்­தாரே தவிர எவ­ரும் காணா­மல் ஆக்­கப்­ப­ட­வில்லை என்று குறிப்­பி­ட­வில்லை. ஆக, இவர்­கள் இரு­வ­ரும் தமிழ்­மக்­கள் பலர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­னர் என்­பதை ஏற்­றுக்­கொண்­டுள்­ள­னர்.

எனின், காணா­மல் ஆக்­கப்­பட்­ட­மைக்­குப் பின்­ன­ணி­யில் எவ­ரெ­வர் உள்­ள­னர்? அவர்­க­ளின் பெயர் விவ­ரங்­கள் தொடர்­பி­லான தக­வல்­கள் என்ன? அவர்­க­ளுக்கு எதி­ராக இந்த அரசு எடுக்­கப்­போ­கும் நட­வ­டிக்கை என்ன? என்று அரச தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்க, தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்க வேண்­டும்.

அதை அவர்­கள் செய்­தி­ருந்­தால் இந்த அரசு ஏதோ ஓரள­வுக்­கே­னும் நடு­வு­நி­லை­யு­டன் செயற்­ப­டு­கி­றது என்ற எண்­ண­வோட்­டம் தமிழ் மக்­கள் மத்­தி­யி­லும் பன்­னாட்­டுச் சமூ­க மட்­டத்­தி­லும் பதிந்­தி­ருக்­கும். ஆனால் கைக­ழு­வல் போக்­கில்­தான் இந்த அரசு செயற்­ப­டு­கி­ற­தே­ யொ­ழிய, சிறு­பான்மை மக்­க­ளுக்­கான தீர்வை வழங்­கும் எண்­ணம் இந்த அர­சி­ட­மும் இம்­மி­ய­ள­வும் இல்லை.

வடக்­குக்­கான தனது முன்னைய பய­ணங்­க­ளின் போது அர­ச தலை­வர், என்னை ஆட்­சிப்­பீ­டம் ஏற்­றி­ய­வர்­கள் தமிழ் மக்­கள். அவர்­க­ளுக்கு நன்­றிக்­க­டன்­பட்­டுள்­ளேன், அவர்­க­ளுக்கு எதை­யா­வது செய்ய வேண்­டும் என்­றெல்­லாம் தெரி­வித்­தி­ருந்­தார். தமிழ் மக்­கள் தமக்கு பொன்­னும் பொரு­ளும் கேட்­க­வில்லை.

காணி விடு­விப்பு, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர் களின் விடு­தலை, இரா­ணு­வப் பிர­சன்­னக் குறைப்பு, அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை ஆகி­ய­வற்­றைத்­தான் திரும்­பத்­தி­ரும்ப வலி­யு­றுத்­திக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விட­யத்­தில் அரச தலை­வர் தனது நன்­றிக்­க­டனை எப்­ப­டிக் காட்­ட­மு­டி­யுமோ அப்­ப­டிக் காட்­டி­யுள்­ளார்.

அடுத்­த­தாக அவர் காணி விடு­விப்­புத் தொடர்­பி­லும், அர­சி­யல் கைதி­ க­ளின் விடு­தலை தொடர்­பி­லும், இரா­ணு­வப் பிர­சன்­னக் குறைப்­புத் தொடர்­பி­லும் தனது நன்­றிக் கடனை எவ்­வாறு வெளிப்­ப­டு­த்தப்­போ­கி­றார் என்­பதை கன­தி­யு­ட­னும், கலக்­கத்­து­ட­னும் தமி­ழர் தாய­கம் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கி­றது.

You might also like