Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

யார் இந்த பிரி­கே­டி­யர் பிரி­யங்க பெர்­னான்டோ ?

லண்­ட­னில் புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளைப் பார்த்து கழுத்தை அறுத்து விடு­வேன் என்று சைகை மூலம் எச்­ச­ரித்த பிரி­கே­டி­யர் பிரி­யங்க பெர்­னான்டோ, ஆயி­ரக்­க­ணக்­கான தமிழ்ப் பொது­மக்­கள் படு­கொலை செய்­யப்­பட்ட இறு­திக்­கட்­டப் போரில், இரா­ணு­வப் படைப் பி­ரி­வுக்­குத் தலைமை தாங்­கிய அதி­காரி என்று அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளார்.

ஜன­நா­ய­கத்­துக்­கான ஊட­க­வி­ய­லா­ளர்­கள் அமைப்­பும், பன்­னாட்டு உண்மை மற்­றும் நீதிக்­கான திட்­ட­மும் இணைந்து வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் இவ்­வாறு கூறப்­பட்­டுள்­ளது.

2008 -– 2009ஆம் ஆண்டு காலப்­ப­கு­தில், மண­லாறுப் பகு­தி­யில் இருந்து முல்­லைத்­தீவு நோக்கி முன்­னே­றிய 59ஆவது படைப்பிரிவில் இடம்­பெற்­றி­ருந்த 11 ஆவது கெமு­னு­கா­வற்படை பற்­றா­லி­ய­னின் கட்­டளை அதி­கா­ரி­யாகப் பிரி­கே­டி­யர் பிரி­யங்க பெர்­னான்டோ பணி­யாற்­றி­யி­ருந்­தார்.

முல்­லைத்­தீவு மருத்­து­வ­மனை மீதான பீரங்­கித் தாக்­கு­தலை 59 ஆவது படைப்பிரிவுப் படை­யி­னரே மேற்­கொண்­ட­னர் என்று ஐ.நா. விசா­ரணை அறிக்­கை­யில் குற்­றஞ் சாட்­டப்­பட்­டுள்­ளது என்­றும் அந்த அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்ளது.