தற்­போது இடம்­பெ­றும் ஆட்சி திணிக்­கப்­ப­டு­கின்ற ஆட்­சியே!!

எதிர்க்­கட்­சித் தலை­வர் சம்­பந்­தன் கூறு­கி­றார்

இன்று நடை­பெ­று­கின்ற ஆட்சி எமது சம்­ம­தத்­து­டன் எமது இணக்­கப்­பாட்­டு­டன் நடை­பெ­று­கின்ற ஆட்சி­அல்ல. எம்­மீது திணிக்­கப்­ப­டு­கின்ற ஒரு ஆட்சி. அது தொடர முடி­யாது. அது ஒரு முடி­வுக்கு வர வேண்­டும்.

இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா சம்­பந்­தன் தெரி­வித்­தார்.கிழக்கு மாகா­ணத்­தில் சில நாள்­க­ளுக்கு முன்­னர் இடம்­பெற்ற பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யில் அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இன்­றைக்கு அர­சி­யல் தீர்வு ஒரு முக்­கி­ய­மான விட­யத்தை பெற்று இருக்­கின்­றது. பல விட­யம் சம்­மந்­த­மாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, எம்.ஏ. சுமந்­தி­ரன் ஆகி­யோர் தெளி­வாக கருத்­துக்­களை சொல்லி இருக்­கின்­றார்­கள்.மக்­க­ளுக்கு ஏற்பு இல்­லாத ஒரு தீர்வை ஒரு­போ­தும் நாங்­கள் ஏற்க மாட்­டோம்.

எமது மக்­க­ளு­டையபிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்க்­கும் வகை­யில் அமை­யாத தீர்வை நாங்­கள் ஏற்க மாட்­டோம். மக்­க­ளுக்கு நாங்­கள் அதை விளக்­கு­வோம். மக்­க­ளு­டைய கருத்­துக்­களை நாங்­கள் பெறு­வோம் பெற்ற பிறகு தான் நாங்­கள் இறுதி முடிவு எடுப்­போம்.

ஐக்­கிய நாடு­கள் சபை­யால் ஒரு தீர்­மா­னம் நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ளது. 2012ஆம் ஆண்டு தொடக்­கம் 2017ஆம் ஆண்­டு­வரை தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்டு இருக்­கின்­றன. 2015ஆம் ஆண்டு நடை­மு­றை­ப­டுத்­தப்­பட்ட தீர்­மா­னத்தில் போர்க் காலம் நடை­பெற்ற விட­யங்­கள் சம்­மந்­த­மாக உண்மை அறி­யப்­ப­டும்.

உண்­மை­யின் அடிப்­ப­டை­யில் நீதி வழங்­கப்­பட வேண்­டும். பொறுப்புக் கூறலை ஏற்­ப­டுத்த வேண்­டும் . பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பரி­கா­ரம் வழங்­கப்­பட வேண்­டும். எல்­லா­வற்­றுக்­கும் மேலாக தேசிய பிரச்­சி­னைக்கு ஒரு நிரந்­த­ர­மான அர­சி­யல் தீர்வு ஏற்­பட வேண்­டும்.

இந்த தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தாக இலங்கை அரசு வாக்­கு­றுதி கொடுத்து இருக்­கி­றது. பன்­னாட்­டுச் சமூ­க­மும் இலங்கை அர­சுக்கு அதற்­கான அழுத்­தங்­களை கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றது.

தமிழ் அர­சுக் கட்­சியை ஆரம்­பித்த பிறகு 1956ஆம் ஆண்டு தொடக்­கம் ஒழுங்­காக நிரந்­த­ர­மாக ஒவ்­வொரு தேர்­த­லி­லும் என்ன வித­மான அர­சி­யல் தீர்வு தமக்கு தேவையோ அதை தெளி­வாக கூறி இருக்­கின்­றார்­கள்.

அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இன்­றைய ஆட்­சி­யில் ஜன­நா­யக முடி­வு­கள் மதிக்­கப்­ப­ட­வில்லை ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இலங்கை சம்­ம­தாமா­க மேற்­கொள்­ளப்­ப­டட தீர்­மா­னங்­க­ளுக்கு மேல­தி­க­மாக ஐக்­கிய நாடு­கள் சப்­பை­யி­னு­டைய ஒப்­பந்­தங்­கள் பிர­க­ட­னங்­கள் என்ற அடிப்­ப­டை­யில் இலங்கை அரசு தவறு இழைத்து இருக்­கி­றது, ஆன படி­யால் பன்­னாட்­டின் பிடி­யில் இருந்து தப்­பு­வது கஷ­டம்.

நாங்­கள் நிதா­ன­மாக நடக்க வேண்­டும். நாங்­கள் பிழை விட கூடாது . சமூ­கம் எம்மை மதிக்­கின்­றது. நாங்­கள் நிதா­ன­மாக இருக்­கின்­றோம். இந்த சூழல்­க­ளில் தான் நீங்­கள் தேர்­தலை எதிர்­நோக்­கு­கின்­றீர்­கள் உங்­க­ளு­டைய முடிவு தெளி­வாக இருக்க வேண்­டும். கடந்த 60 ஆண்­டு­க­ளாக ஒப்­பிட்டு பாக்­கை­யில் நீங்­கள் இன்­ன­மும் உறு­தி­யாய் இருக்­கின்­றீர்­கள் என்ற செய்தி வெளி வர வேண்­டும்- – என்­றார்.

You might also like