Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

காதலரைக் கரம் பிடிக்கிறார் ஸ்ரேயா!!

ரஷ்யாவைச் சேர்ந்த தனது காதலரைத் திருமணம் செய்ய உள்ளார் நடிகை ஸ்ரேயா. ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், மழை உள்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா.

இப்போது தமிழில் அரவிந்த் சாமி ஜோடியாக நரகாசூரன், தெலுங்கில் வீரபோக வசந்த ராயலு, இந்தியில் தட்கா படங்களில் நடித்து வருகிறார். இவர் கிரிக்கெட் வீரர் பிராவோவுடன் இணைத்து கிசு கிசுக்கப்பட்டார்.

இந்தநிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த காதலரை மணக்க உள்ளதாக பொலிவூட்டில் தகவல் வௌியாகியுள்ளது. மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றபோது, ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞரை ஸ்ரேயா சந்தித்ததாகவும் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து வரும் மார்ச்சில் திருமணம் செய்ய ஸ்ரேயா முடிவு செய்துள்ளார். இவர்களின் திருமணம் ஜெய்ப்பூரில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.