Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

ஒளிச்சுடர்  சம்பியன்

காரைந­கர் பிர­தேச செய­லக பிரி­வுக்­குட்­பட்ட பதிவு செய்­யப்­பட்ட விளை­யாட்­டுக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான கடற்­கரை கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஒளிச்­சு­டர் விளை­யாட்­டுக் கழக அணி கிண்­ணம் வென்­றது.

அண்­மை­யில் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் ஒளிச்­சு­டர் அணியை எதிர்த்து கலா­நிதி அணி மோதி­யது. மூன்று செற்­க­ளைக் கொண்­ட­தாக ஆட்­டம் அமைந்­தது. முத­லா­வது செற்றை 21:15 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்­றி­யது ஒளிச்­சு­டர் அணி.

21:19 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் இரண்­டா­வது செற்­றைக் கைப்­பற்­றி­யது கலா­நிதி அணி. மூன்­றா­வது செற்­றில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அந்த செற்றை 15:09 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி 2:1 என்ற செற் கணக்­கில் கிண்­ணம் வென்­றது ஒளிச்­சு­டர் அணி.