ரூ.1 1/2 கோடி பெறு­ம­தி­யான கஞ்­சா­வு­டன் மூவர் சிக்­கி­னர்!!

மன்­னார் சிலா­வத்­து­றை­யில் சுமார் ஒரு கோடியே 54 இலட்­சம் ரூபா பெறு­ம­தி­யான கேர­ளக் கஞ்சா நேற்­றுக் காலை மீட்கப்பட்டது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். சந்­தே­க­ந­பர்­கள் மூவ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

பொதி செய்­யப்­பட்ட நிலை­யில் கஞ்சா மீட்­கப்­பட்­டுள்­ளது.
மன்­னார் பொலிஸ் நிலைய போதைப்­பொ­ருள் தடுப்பு பிரி­வி­ன­ரின் நட­வ­டிக்­கை­யி­லேயே கஞ்சா சிக்­கி­யுள்­ளது.

கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் மன்­னார் பொலிஸ் நிலை­யத்­தில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். மன்­னார் நீதி­மன்­றத்­தில் இன்று முற்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

You might also like