Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

முக்­கிய படி­நிலை

தேர்­தல் பரப்­பு­ரை­கள் முற்­றி­லு­மாக முடி­வ­டைந்து நாளை நாடெங்­கி­லும் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது. உள்­ளாட்­சித் தேர்­தல்­தானே என்று அவ்­வ­ளவு இல­கு­வில், அசண்­டை­யீ­னத்­தில் இந்­தத் தேர்­த­லைத் தட்­டிக்­க­ழித்­து­வி­டா­மல் வாக்­கா­ளர்­கள் தமது ஆத­ரவை சரி­யான, தகுதி­யான வேட்­பா­ள­ருக்கு வழங்­கு­தல் அவ­சி­யம்.

ஏனெ­னில் இதுவே கூடு­தல் ஜன­நா­ய­கத் தன்மை கொண்ட தேர்­தல். அதே­நே­ரம் அதி­கா­ரக் கட்­ட­மைப்­பின் அத்­தி­பா­ர­மும்­கூட.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் தெரி­வு­முறை ஏனைய தேர்­தல்­க­ளில் இருந்து வேறு­ப­டு­கின்­ற­து. இந்­தத் தேர்­த­லில் வாக்­கா­ளர்­க­ளுக்­கும் வேட்­பா­ளர்­க­ளுக்­கும் நெருங்­கிய தொடர்பு பேணப்­ப­டு­கி­றது.

தத்­த­மது வட்டாரத்தில் தமக்கு நன்கு பரீட்­ச­ய­மா­ன­வரை, சரி­யான நபர் என்று அடை­யா­ளம் காணு­ப­வரை மக்­கள் தெரிந்­தெ­டுக்­கின்­ற­னர். அவ­ரி­டம் அதி­கா­ரத்தை நம்­ப­கத் தன்­மை­யு­டன் ஒப்­ப­டைக்­கின்­ற­னர்.

வேட்­பா­ள­ரும் தன்­னைத் தெரிவு செய்த வாக்­கா­ள­ரைப் புறந்­தள்ளி விடா­மல் அவர்­க­ளுக்­குப் பொறுப்­புச் சொல்­லக் கட­மைப்­பட்­டுள்­ளார். ‘பொறுப்­புக்­கூ­று­தல்’ என்­பது மிகை­யாக உள்ள தேர்­தல் கட்­ட­மைப்பு உள்­ளூ­ராட்­சித் தேர்­தலே. அதே­போல் ‘நம்­ப­கத்­தன்மை’ கொண்ட தேர்­தல் கட்­ட­மைப்­பும் இதுவே.

அதா­வது வாக்­கா­ள­ருக்­கும் வேட்­பா­ள­ருக்­கும் மிக நெ­ருங்­கிய நேர­டித் தொடர்பு இந்­தத் தேர்­தல் கட்­ட­மைப்­பில் காணப்­ப­டு­கி­றது. ஆத­லால் இது கூடு­தல் ஜன­நா­ய­கத் தன்­மை­யும் கொண்­டது.

இத­னால் இந்­தத் தேர்­த­லைத் தட்­டிக்­க­ழித்து விடா­மல் தத்­த­மது பிர­தி­நி­தி­களை மக்­கள் தேர்ந்­தெ­டுக்க வேண்­டும். அதே­நே­ரம் வேட்­பா­ளர் நன்கு பரீட்­ச­ய­மா­ன­வர், தனது உற­வி­னர் என்ற பின்­ன­ணி­க­ளில் எல்­லாம் தெரி­வு­கள் அமைந்­து­வி­டக் கூடாது.

அந்த வகை யில் மக்­கள் கூடு­தல் விழிப்­பு­ணர்­வு­டன் செயற்­பட வேண்­டிய தேர்­த­லும் இதுவே. தனிப்­பட்ட விருப்பு வெறுப்பு களுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­காது தமது புள்­ள­டி­களை வாக்­கா­ளப் பெரு­மக்­கள் வழங்க வேண்­டும்.

அதி­கா­ரக் கட்­ட­மைப்­பைப் பொறுத்த வரை­யில் நாடா­ளு­மன்­றம், மாகாண சபை ஆகி­ய­வற்­றுக்கு அடுத்த படி­நி­லை­யாக மூன்­றா­வது அதி­கா­ரக் கட்­ட­மைப்­பில் உள்­ளூ­ராட்­சிச் சபை­கள் உள்­ளன. இந்­தக் கட்­ட­மைப்­பில் கொடுக்­கின்ற அழுத்­தத்­தின் மூலமே ஏனைய படி­நி­லை­க­ளைச் சரி­செய்­து­கொள்ள முடி­யும்.

ஆக, மாகாண சபைக்­கும், நாடா­ளு­மன்­றத்­துக்­கும் நாம் போடு­கின்ற கடி­வா­ளம் என்­றும்­கூட இந்­தத் தேர்­த­லை­யும் தேர்­த­லின் பின்­ன­ரான நகர்­வு­க­ளை­யும் குறிப்­பிட முடி­யும். எனவே இந்­தத் தேர்­த­லில் உள்ள கன­தித் தன்­மை­யை­யும் உணர்ந்­த­வர்­க­ளாக மக்­கள் செயற்­பட வேண்­டும்.

அதுவே ஆக்­க­ பூர்­வ­மா­ன­தாக அமை­யும். ஆக்­க­பூர்­வ­ மா­னதை உரு­வாக்­கும்.
தேர்­தல் பரப்­பு­ரை­க­ளில் கட்­சி­கள் முன்­வைத்த திட்­டங்­களை மக்­கள் ஆய்ந்­த­றிந்­து­கொள்ள வேண்­டும்.

தேர்­தல் பரு­வ­கால பரஸ்­ப­ரக் குற்­றச்­சாட்­டுக்­கள், கருத்து மோதல்­கள், உசுப்­பேற்­றல்­கள் ஆகி­ய­வற்­றைக் கவ­னத்­தில் கொண்டு சரி­யா­னது எது? தவ­றா­னது எது? என்று பிரித்­த­றி­தல் வேண்­டும்.

இந்­தக் கட்­சிக்­குத்­தான் எமது வாக்கு என்­பதை முற்­கூட்­டியே தீர்­மா­னித்­த­வர்­க­ளாக அல்­லா­ம­லும், தேர்­தல் முழக்­கங்­க­ளுக்கு எடு­பட்­ட­வர்­க­ளாக அல்­லா­ம­லும் விளங்கி நடுவு நிலை­யு­டன் செயற்­ப­டல் வேண்­டும்.

இந்­தப் பத்­தி­யில் ஏற்­க­னவே குறிப்­பிட்­ட­தைப்­போன்று, வாக்­க­ளிப்­பது என்­பது மக்­க­ளின் முதன்­மை­யான அர­சி­யல் உரிமை. அந்த உரி­மையை எந்­தக் கார­ணத்­தைக் கொண்­டும் தவ­ற­விட்­டு­வி­டல் கூடாது. அதே­போல் வாக்­க­ளித்­தல் எமது ஜன­நா­ய­கக் கடமை.

நாம் எமது கட­மை­யைச் சரி­வ­ரச் செய்­தல் அவ­சி­யம். காலத்­தின் தேவை­யும் அதுவே. நாளை எமது கட­மை­யைச் செய்­யா­மல், அத­னால் எமது உரி­மை­யைத் தவ­ற­விட்­டு­விட்­டுப் பின்­னர் வருத்­தப்­ப­டல் ஆகாது. அத­னால் பய­னொன்­றும் கிட்டப்ேபாவதில்லை.