தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

மன்னார் மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட செயலரும், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான எம்.வை.எஸ்.
தேசப்பிரிய தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக இன்று இடம்பெற்ற மன்னார் மாவட்டச்
செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்ததாவது

தேர்தல் கடமைக்காக சிறப்பு அதிகாரிகள் ,ஆயிரம் அரச உத்தியோகத்தர்களும், பொலிஸ் அதிகாரிகளும் தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை மன்னார் மாவட்ட மக்களின் பூரண ஒத்துழைப்போடு சரியான முறையில் அமைதியாக தேர்தல்
நடவடிக்கைகளை எதிர்பார்த்துள்ளோம் எனத் தெரிவித்தார்

You might also like