Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

இன்றைய விதைப்பே எதிர்கால அறு­வ­டை­

கத்­தோ­லிக்­கர்­கள் தமது புனித நூலா­கக் கரு­தும் வேதா­க­மத்­தில் அற்­பு­த­மான வாச­கம் ஒன்று உள்­ளது. ‘ஒரு­வர் தான் விதைப்­ப­தையே அறு­வடை செய்­வார்’ (கலாத்­தி­யர் 6:7) என்ற வாச­கமே அது. இந்த வாச­கம் தேர்­தல் காலங்­க­ளி­லும் கச்­சி­த­மா­கப் பொருந்­தும். அது வாக்­கா­ளர்­க­ளாக இருந்­தா­லும் சரி, வேட்­பா­ளர்­க­ளாக இருந்­தா­லும் சரி. இன்று நடை­பெ­று­கின்ற உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கும் இந்த வாச­கம் மிகப் பொருத்­த­மாக அமை­யத்­தான் செய்­கி­றது.
தேர்­த­லுக்கு முன்­ன­தான பரப்­பு­ரை­க­ளில் தாம் முழங்­கித் தள்­ளி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யி­லும் இது­வரை கால­மும் தாம் என்­னென்ன காரி­யங்­கள் ஆற்­றின என்­பது தொடர்­பி­லும் அறு­வ­டை­செய்ய அர­சி­யல் கட்­சி­க­ளும், சுயேச் சைக் குழுக்­க­ளும் காத்­துள்­ளன.

பரு­வ­கா­லக் குற்­றச்­சாட் டுக்­கள், கண்­ட­னங்­கள், மிகைப்­ப­டுத்­தப்­பட்ட முழக்­கங்­கள், வழங்­கிய வாக்­கு­று­தி­கள், விடுத்­தி­ருந்த அறிக்­கை­கள், தொடர் மேடைப் பேச்­சுக்­கள், வெளிப்­ப­டுத்­திய சாத்­தி­யப்­ப­டக்­கூ­டிய திட்­டங்­கள் ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் இன்று அர­சி­யல் கட்­சி­க­ளும் சுயேச்ைசக் குழுக்­க­ளும் தத்­த­மக்­கு­ரிய அறு­வ­டை­யைப் பெற்­றுக்­கொள்­ளப் போகின்­றன. மக்­கள் இந்த அறு­வ­டையை வழங்­கப்­போ­கி­றார்­கள். விளைச்­சல் அமோ­க­மா­ன­தா, சுமா­ரா­னதா, மோச­மா­னதா, படு­மோ­ச­மா­னதா என்­பது தொடர்­பில் தீர்­மா­னிக்­கும் சக்­தி­யும் மக்­க­ளி­டமே உள்­ளது. இது தவிர்க்­கப்­பட முடி­யா­தது. இதுவே ஜன­நா­ய­கம். ஜன­நா­யக அர­சில்அரங்­கில் மக்­களே எல்­லா­மும்.

‘அறு­வடை’ என்­கின்ற எண்­ணக்­கரு அர­சி­யல் கட்­சி­ க­ளுக்கோ அல்­லது சுயேச்சைக் குழுக்­க­ளுக்கோ மட்­டு­மா­னது இல்லை. அது வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும் பொருந்­தும். இன்று அவர்­கள் விதைக்­கும் வாக்­கு­க­ளில்­தான் எதிர்­கால அறு­வ­டை­யைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும். விதைப்பு சரி­யாக அமை­கி­றதா என்­பதை மக்­கள் விழிப்­பு­ணர்­வு­டன் பார்த்­துக்­கொள்­ளல் மிக­மிக அவ­சி­யம்.

விதைப்பை இன்று திறம்­ப­டச் செய்­யா­மல் விட்­டு­விட்டு எதிர்­கா­லத்­தில் அறு­வடை சரி­யில்லை என்று அழுது புலம்­பு­வ­தால் எவ­ருக்கு என்ன பயன். ஆக, வாக்­கு­கள் என்ற நாற்­றுக்­களை வாக்­கா­ளப் பெரு­மக்­கள் இன்று திறம்­ப­டக் கையாள வேண்­டும். உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வாக்­கா­ளர்­க­ளுக்­கும் வேட்­பா­ளர்­க­ளுக்­கும் மிக­நெ­ருங்­கிய தொடர்பு உள்­ளது.

வேட்­பா­ளர்­க­ளுக்­கும் வாக்­கா­ளர்­க­ளுக்­கும் உறவு நிலைத் தொடர்­பும்­கூட அவ­சி­யம் இருக்­கத்­தான் செய்­யும். எனது அண்­ணன், தங்கை, மாமா, மைத்­து­னன் உள்­ளிட்ட பற்­பல உறவு நிலை­ க­ளுக்­குள் வாக்­கு­க­ளைத் தொலைத்­து­விட வேண்­டாம். உற­வு­நி­லையை, தெரிந்­த­வர் பழ­கி­ய­வர் என்ற பாகு­ பா­டு­களை ஓரம் வைத்­து­விட்டு சரி­யான நபர் என்று இனங்­கண்­டு­கொள்­ப­வ­ருக்கு வாக்­கா­ளர்­கள் தமது வாக்­கு­களை வழங்க வேண்­டும். அது சரி. அதுவே அர­சி­யல் நேர்மை. அதுவே தர்­மம்.

மக்­களே! வாக்­க­ளிப்­ப­தற்கு மாலை 4 மணி­வரை கால­அ­வ­கா­சம் உள்­ள­து­தானே என்று உள்­ளூர நினைத்­து ­விட்டு பிந்­திச் செல்­லா­தீர்­கள். உங்­க­ளுக்கு என்று குறித்து ஒதுக்­கப்­பட்ட வாக்­குச் சாவ­டி­க­ளுக்கு எவ்­வ­ளவு முடி­யுமோ அவ்­வ­ளவு விரை­வா­கச் செல்­லுங்­கள். வாக்­க­ளிக்­கும் உங்­கள் கட­மையை நேர­கா­லத்­து­டன் செய்­யுங்­கள். தேர்­தல் முறை­கே­டு­கள், மோச­டி­கள் குறித்து எச்­ச­ரிக்­கை­யு­டன் இருங்­கள். உங்­கள் உரி­மையை இறுகப் பற்­றிப் பி­டித்­துக் கொள்­ளுங்­கள்.

இன்­றைய நாளின் கன­தித்­தன் மையை உணர்ந்­து­கொள்­ளுங்­கள். இன்­றைய நாளின் நாய­கர்­கள் நீங்­களே என்­பதை எண்­ணிப் பெரு­மி­தம் கொள்­ளுங்­கள். அந்­தப் பெரு­மி­தத்­து­டன் எதிர்­கா­லத்­தில் பெரு­மைப்­ப­டும்­ப­டி­யா­ன­வர்­க­ளைத் தெரிந்­தெ­டுங்­கள். விதைப்பைச் சரி­யாகச் செய்து முடி­யுங்­கள். அதை திறம்­ப­டச் செய்­தால் எதிர்­கால அறு­வடை அமோ­க­மாக அமை­யும்.