Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

சிங்­கள பேரி­ன­வா­தம்

இலங்­கை­யின் 70ஆவது சுதந்­திர தினத்­தன்று பிரிட்­ட­னில் வாழும் புலம்­பெ­யர் தமி­ழர்­கள் லண்­ட­னில் உள்ள இலங்­கைத் தூத­ர­கத்­தின் முன்­பாக அணி­தி­ரண்டு போராட்­டம் நடத்தி இலங்கை அரசுக்கு எதிரான தத்­த­மது எதிர்ப்பை பதி­வு­செய்­தி­ருந்­த­னர்.

லண்­ட­னில் உள்ள இலங்­கைத் தூத­ர­கத்­தில் பாது­காப்பு ஆலோ­ச­க­ரா­கக் கட­மை­யாற்­றும் பிரி­கே­டி­யர் பிரி­யங்க பெர்­னான்டோ போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­களை அச்­சு­றுத்­தும் வகை­யில் ‘கழுத்தை அறுப்­பேன்’ என்­னும் வித­மாக சைகை செய்­தி­ருந்­தார். இது காணொ­லி­யா­கப் பதி­வு­செய்­யப்­பட்டு பன்­னாட்டு ஊட­கங்­க­ளால் வெளி­யி­டப்­பட்­டது.

சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் மிக­வும் வேக­மாக குறித்த காணொலி பரவி பர­ப­ரப்­பா­கி­யது. இவ்­வாறு அச்­சு­றுத்­தும் வகை­யில் நடந்­து­கொண்ட பிரி­கே­டி­யர் பிரி­யந்த பெர்­னான்­டோ­வுக்கு எதி­ராக கண்­ட­னங்­கள் வலுத்­தன.

அவர் மீது கடும் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்ற குரல் பர­வ­லாக வலுத்­தது. எனி­னும் அவர் மீது எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­போ­வ­தில்லை என்று அழுத்­தம் திருத்­த­மாக இலங்­கை­யின் தரப்­பில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சிறு­பான்மை மக்­க­ளைப் பொறுத்­த­மட்­டில் எந்­த­வி­த­மான ஒழுக்­காற்று நட­வ­டிக்­கையோ அல்­லது சட்ட நட­வ­டிக்­கையோ இல்­லா­மல் பெர்­னான்டோ தனது பணி­க­ளைத் தொடர்­கின்­றமை ஏற்­றுக்­கொள்­ளத் தகா­த­வொன்றே. இது ஜன­நா­ய­க­மும் அல்ல.

இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்க, பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் ருவான் விஜ­ய­வர்த்­தன ஆகி­யோர் சேன­நா­யக்க செய்­த­து­தான் சரி என்று தத்­த­மது கருத்­துக்­க­ளை­யும், அத­னூ­டான ஆத­ர­வை­யும் பதி­வு­செய்­துள்­ள­னர்.

சம்­ப­வம் தொடர்­பில் முழு­மை­யான காணொ­லிப் பதி­வு­கள் எமக்­குக் கிடைத்­துள்­ளன. ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்ட நபர்­கள், கார­ணி­கள் மற்­றும் இடம்­பெற்ற சம்­ப­வங்­கள் என்று அனைத்­தை­யும் ஆராய்ந்­தோம். பிரி­யங்க மீது எந்­தத் தவ­றும் இல்லை.

அவர் மீது எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அரச தலை­வ­ரின் நேர­டித் தலை­யீட்­டில் பிரி­யங்க தனது பத­வி­யைத் தொடர அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது என்று இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்க குறிப்­பிட்­டுள்­ளார்.

புலம்­பெ­யர் தமி­ழர்­களைப் புலி­கள் என்ற போர்­வை­யின் கீழ் அடையாளப்படுத்துவது இலங்கை அர­சுக்குக் கைவந்த கலை. அதை மீண்­டும் ஒரு­முறை நிரூ­பித் துள்­ளார் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் ருவான் விஜ­ய­வர்த்­தன.

அவர், சுதந்­திர தினத்­தன்று இலங்கை அர­சுக்கு எதி­ராக போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள் புலி­கள். அவர்­க­ளுக்கு அடி­ப­ணி­யா­மல் பிரி­யங்க செயற்­பட்­டுள்­ளார் என்­னும் வித­மாக தனது கருத்­தைப் பகிர்ந்­துள்­ளார்.

ஒரு ஜன­நா­யக நாட்­டில் மக்­க­ளுக்கு ஏகப்­பட்ட உரி­மை­கள் உள்­ளன. இதன்­படி ஒன்­று­கூ­டு­வ­தற்­கும், தத்­த­மது கருத்­துக்­களை, எதிர்ப்­புக்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கும்­கூட மக்­க­ளுக்கு உரி­மை­யுள்­ளது.

அதி­லும் பிரிட்­டன் போன்ற ஜன­நா­ய­கத்­துக்கு இலக்­க­ண­மான நாட்­டில் வைத்தே, ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­வ­தற்­கும் அத­னூ­டாக தத்­த­மது கருத்­து­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கும் விடுக்­கப்­பட்­டுள்ள இந்த எச்­ச­ரிக்கை, கொலை மிரட்­டலை என்­ன­வென்று சொல்­வது?

இலங்­கைக்கு வெளி­யி­லேயே தமி­ழர்­க­ளுக்கு இந்த நிலை­யென்­றால், இலங்­கைக்கு உள்ளே எவ்­வா­றாக அவர்­கள் நடத்­தப்­ப­டு­வார்­கள்? அவர்­க­ளுக்கு உரிய உரிமை எந்த மட்­டத்­தில் பேணப்­ப­டும் என்­பது தொடர்­பில் பன்­னாட்­டுச் சமூ­கம் சிந்­திக்க வேண்­டும்.

பிரி­யங்க பெர்­னான்­டோ­வினது செயற்பாடுக்கு எதிராக இலங்­கை­யில் வாழும் சிறு­பான்மை மக்­க­ளும் தத்­த­மது எதிர்ப்­புக்­களை வலு­வா­கப் பதி­வு­செய்ய வேண்­டும். அது காலத்­தின் கட்­டா­ய­மும்­கூட.