Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

இனவாதமே அத்திபாரம்!!

உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­தல் நீண்ட இழு­ப­றி­ க­ளுக்கு மத்­தி­யில் நடை­பெற்று முடிந்­துள்­ளது. புதிய தெரிவு முறை­மை­யின் கீழ் தெரி­வு­கள் அமைந்­துள்­ள­ப­டி­யால் பெரும்­பா­லான வாக்­கா­ளர்­கள் நடப்­பது என்ன என்று தெரி­யா­மல் குழப்­பத்­தி­லும் கலக்­கத்­தி­லும் உள்­ள­னர்.

இது ஒரு­பு­றம் இருக்க, தெற்­கில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன முன்­னணி தாண்­ட­வம் ஆடி­யுள்­ளதை தேர்­தல் முடி­ வு­கள் வெளிப்­ப­டுத்தி நிற்­கின்­றன.

சிறி­லங்கா பொது­ஜன முன்­னணி பெற்­றுள்ள வெற்­றி­யா­னது மகிந்­த­வுக்­கான ஆத­ரவு அலை தெற்­கில் இன்­னும் இம்­மி­ய­ள­வும் குறை­ய­வில்லை என்ற செய்­தி­யு­டன், இலங்­கை­யில் அதி­லும் குறிப்­பாக சிங்­கள பெரும்­பான்மை மக்­கள் மத்­தி­யில் ஒரு கட்சி தனது அர­சி­யல் இருப்பை நிலைப்­ப­டுத்த வேண்­டு­மா­யின், தனது வெற்­றி­யைப் பலப்­ப­டுத்த வேண்­டு­மா­யின் இன­வா­தத்தை அத்­தி­பா­ர­மா­கக் கொண்டு செயற்­பட வேண்­டும் என்ற தக­வ­லை­யும் வழங்கி நிற்­கி­றது.

தற்­போது நடை­மு­றை­யில் உள்ள அர­ச­மைப்பை மாற்றி புதி­ய­தொரு அர­ச­மைப்­பைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு அரச தலை­வர் மைத்­திரி – தலைமை அமைச்­சர் ரணில் தலை­மை­யி­லான கூட்டு அர­சு­டன் கடு­மை­யாக முன்­னின்று உழைத்­தது கூட்­ட­மைப்பு.

வடக்கு – கிழக்கு இணைப்பு, நிதித்­து­றைச் சுதந்­தி­ரம், திரும்­பப் பெறப்­பட முடி­யா­த­வா­ றான இறுக்­க­மான பொறி­மு­றை­யி­னூ­டாக அதி­கா­ரப் பகிர்வு ஆகிய மூன்று அம்­சக்­கோ­ரிக்­கை­களை கூட்­ட­மைப்பு கூட்டு அர­சி­டம் வைத்­தி­ருந்­தது.

புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கத்­துக்­கும் கூட்­ட­மைப்­பின் மூன்று அம்­சக் கோரிக்­கை­க­ளுக்­கும் மகிந்த ஆரம்­பத்­தி­லேயே தனது எதிர்ப்­பைப் பதி­வு­ செய்­தி­ருந்­தார்.

இதன் அடிப்­ப­டை­யில், நடை­பெற்ற உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில், புதிய அர­ச­மைப்பை தனது தேர்­தல் பரப்­பு­ரைக்­கான ஆகச் சிறந்த துருப்­புச் சீட்­டாக மகிந்த எதிர் மறை­யா­கப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

புதிய அர­ச­மைப்பு உரு­வா­னால் வடக்கு – கிழக்கு இணை­யும், தமி­ழர்­தா­ய­கம் உரு­வா­கும், நாடா­ளு­மன்­றத்­தை­யும் விட மாகாண சபை­கள் கூடு­தல் அதி­கா­ரம் பெற்­றுத் திக­ழும், பல்­லா­யி­ரக் கணக்­கான எமது சிப்­பாய்­கள் தமது இன்­னு­யி­ரைத் தியா­கம் செய்­தது தமி­ழர் தாய­கம் மலர்­வ­தற்­கா­கவா?
என்­றெல்­லாம் முழங்­கி­யி­ருந்­தார் அவர்.

மகிந்­த­வின் இந்த முழக்­கங்­கள் மிகச் சிறப்­பா­கவே செவிம­டுக்­கப்­பட்­டுள்­ளன. அதி­லும் கிரா­மப்­புற மக்­கள் மகிந்­த­வுக்கு நன்கு செவி­சாய்த்­துள்­ள­னர். கிரா­மப்­பற சபை­கள் எவ்­வித எதிர்ப்­பும் இல்­லா­மல் மகிந்­த­வின் கைக­ளுக்­குள் சென்­றுள்­ளமை இன­வா­தப் பரப்­பு­ரை­கள் எந்­த­ள­வுக்கு தெற்­கில் இன்­ற­ள­வும் அர­சி­யல் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்­கின்­றன என்­பதை வெளிப்­ப­டுத்தி நிற்­கின்­றன.

மகிந்­த­வின் இந்த வெற்றி புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்க முயற்­சிக்கு பெரும்­பான்­மைச் சமூ­கத்­தி­டம் எத்­த­கைய எதிர்ப்­பு­ணர்வை, எதிர்ப்­ப­லையை உண்­டு­பண்­ணி­யுள்­ளது என்று தெளி­வா­கி­றது. தேர்­த­லில் படு­தோல்­வி­ய­டைந்­துள்ள சுதந்­தி­ரக் கட்­சி­யும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் அர­ச­மைப்­புக்­காக தொடர்ந்து பாடுப­டும் என்று எதிர்­பார்க்க முடி­யாத சூழ்­நி­லையே தற்­போ­துள்­ளது.

ஆக, புதிய அர­ச­மைப்­புத்­தான் தமக்­கான தீர்வு என்று நம்­பிக்­கொண்­டி­ருந்த தமி­ழர் தாய­கம் கானல்­நீ­ராக அதைக் கடந்­து­செல்­லத் தயா­ராக வேண்­டிய அர­சி­யல் சூழ்­நி­லையே தற்­போது எழுந்­துள்­ளது.

மகிந்­த­வின் வெற்றி, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் எங்­கும் இல்லை என்று அரச தலை­வர் அண்­மை­யில் வெளிப்­ப­டுத்­தி­யமை, வடக்கு – கிழக்கு இணைக்­கப்­ப­டாது என்று தலைமை அமைச்­சர் தேர்­தல் பரப்­பு­ரைக் காலத்­தில் தெரி­வித்­தமை ஆகி­வற்றை ஒரே நேர்­கோட்­டில் வைத்­துப் பார்க்­கை­யில் தமி­ழர்­களை இனிக் கட­வுள்­தான் காப்­பாற்ற வேண்­டும் என்ற வார்த்­தை­யைச் சுமந்­த­படி கண்­முன் வந்­து­செல்­கி­றார் தந்தை செல்வா.