மன்­னார் கீரி கிரா­மத்­தி­லுள்ள தனி­யார் காணி­யில் தீ ப­ர­வல்!!

மன்­னார் கீரி கிரா­மத்­தில் உள்ள தனி­யா­ருக்கு சொந்­த­மான காணி ஒன்­றில் நேற்று மாலை திடீ­ரென தீ ப­ர­வியதில் காணி­யில் காணப்­பட்ட மரங்­கள் தீயில் எரிந்து சேத­மா­கி­யுள்­ளன என பிர­தேச மக்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கீரி கிரா­மத்­துக்கு அரு­கில் உள்ள கர்த்­தர் கோவில் பகு­தி­யில் உள்ள தனி­யா­ருக்கு சொந்­த­மான சுமார் 2 ஏக்­கர் காணி­யில் நேற்று மாலை திடீ­ரென தீ பரவி யது.

குறித்த காணி­யில் காணப்­பட்ட பச்சை மரங்களான தென்னை, பனை மரங்­கள் எரிந்­துள்­ளன. தீயைக் கட்­டுப்­ப­டுத்த முயற்­சி­களை மேற்­கொண்ட போதும் பய­ன­ளிக்­க­வில்லை.

சம்­ப­வம் தொடர்­பாக மன்­னார் பொலிஸ் நிலை­ யத்­துக்கு தக­வல் வழங்­கிய போதும் பொலி­ஸார் உட­ன­டி­யாக சம்­பவ இடத்­துக்கு வந்து தீயைக் கட்­டுப்­ப­டுத்­தும் முயற்­சி­களை மேற்­கொள்­ள­வில்லை என பிர­தேச மக்­கள் குற்­றம்­சாட்­டி­ யுள்­ள­னர்.

You might also like