Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

விராட் கோக்லி ஆவேசமானவர்!!

‘‘இந்திய அணியின் தலைவர் விராட் கோக்லியின் தலைமைத்துவம் மிகமிக அற்புதமானதாக உள்ளது’’ என்று தெரிவித்தார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் அப்ரிடி.

‘‘விராட் கோக்லி அபாரமாகப் பணியாற்றி வருகிறார்.கட்டுப்பாட்டுடன் இருந்தால் அவரது ஆக்ரோசம் பற்றி எனக்குப் பிரச்சினை எதுவுமில்லை. விராட் கோக்லியின் குணாதிசயம் மகேந்திர சிங் டோனியுடன் ஒப்பிடுகையில் வித்தியாசமானது. டோனி அமைதியானவர், நிதானமானவர். திடீரென ஒரு நபர் தனது உள்ளார்ந்த இயல்பை மாற்றிக் கொள்ள முடியாது.

ஆனால் கோக்லி தன்னுடன் தன் அணியையும் வெற்றிக்கு அழைத்துச் செல்வதுதான் அவரது மிகப்பெரிய சொத்து. கோக்லி ஒரு அருமையான மனிதர், என்னுடைய பவுண்டேஷனுக்கு அவர் தனது ஜெர்சியை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடையாக அளித்தார். நான் எப்போது கோக்லியிடம் பேசினாலும் சக மனித உணர்வு மிகவும் நெகிழ்ச்சியூட்டக்கூடியதாக இருக்கும்.

நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்கிறோம் என்று அர்த்தமல்ல, அவ்வப்போது அவர் குறுஞ்செய்தி அனுப்புவ துண்டு, அவர்களின் திருமணத்துக்கு சமீபத்தில் நான் வாழ்த்துத் தெரிவித்தேன்.
இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இடையிலான உறவு இருநாடுகளுக்குமான உறவு மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் நானும் கோக்லியும் உதாரணமாக அமைய முடியும். பாகிஸ்தானுக்குப் பிறகு என்னை அதிகம் பிடிக்கும் இரு நாடுகளில் ஒன்று இந்தியா, மற்றொன்று ஆஸ்திரேலியா’’ என அப்ரிடி மேலும் தெரிவித்தார்.