Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

ஒன்று சேர்ந்தது பார்த்தீபன்- சீதா குடும்பம்!!

நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமண நிச்சயதார்த்தத்தில் சீதா கலந்து கொண்டார். நடிகர் பார்த்திபன், நடிகை சீதாவின் இளைய மகள் கீர்த்தனாவுக்கும், இயக்குனர் அக்ஷய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

பார்த்திபனை விவாகரத்து செய்து விட்ட சீதா தனது மகளின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார். தாயும், மகளும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒளிப்படம் வெளியாகியுள்ளது. அக்ஷய் கீர்த்தனாவும், அக்ஷயும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 18 வயதில் இருந்து அக்ஷயைக் காதலித்து வந்துள்ளார் கீர்த்தனா. அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.

கீர்த்தனா, அக்ஷய் திருமண நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் அவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.

திரையுலக பிரபலங்களின் வீடுகளுக்கு சென்று மகளின் திருமணத்திற்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பார்த்திபன். பத்திரிகை வைக்க செல்லும் இடத்தில் எடுக்கும் ஒளிப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.