Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பதவி விலகவுள்ளாரா ரணில்?- கொழும்பு அரசியல் பரபரப்பில்

அரச தலைவர் மைத்திரியுடன் தற்போது சந்திப்பில்

தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து விலகக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே தற்போது சந்திப்பு நடந்துவரும் நிலையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியில் இருந்து விலகுவதற்கான சாத்தியங்களே அதிகம் உள்ளன என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

எனினும் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.