Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

சேர்ந்து செயற்­ப­டுங்­கள் – யாழ்.ஆயர் வேண்­டு­கோள்!!

தமிழ் மக்­க­ளின் இன்­றைய நிலை -அவர்­க­ளின் அவ­சிய தேவை­கள் – முன்­னு­ரி­மை­கள் என்­ப­வற்றைக் கவ­னத்­திற் கொண்டு எல்லா வேறு­பா­டு­க­ளை­யும் மறந்து தமி­ழர்­கள் என்ற ரீதி­யில் இணைந்து செய­லாற்­றுங்­கள் என்று சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ரி­ட­மும் தமிழ் மக்­கள் பெய­ரால் வேண்டி நிற்­கி­றோம். இவ்­வாறு யாழ்.மறை­மா­வட்ட ஆயர் கலா­நிதி யஸ்­ரின் பேணாட் ஞானப்­பி­ர­கா­சம் தெரி­வித்­துள்­ளார்.

அவர் அனுப்பி வைத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது-,

இலங்­கை­யின் அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கு­மான தேர்­தல் நீண்ட காலத்­தின் பின்­னர் ஒரே நாளில் வன்­மு­றை­கள் அற்ற நிலை­யில் மிக அமை­தி­யாக நடை­பெற்று முடிந்­துள்­ளது.

தேர்­தல் முடி­வு­கள் ஒரு சில இடங்­க­ளைத் தவிர ஏனைய இடங்­க­ளில் கட்­சி­கள் இணைய வேண்­டும் என்ற தேவை­யையே சுட்டி காட்டி நிற்­கின்­றன. இதுவே இன்­றைய காலத்­தின் தேவை­யு­மா­கும்.

ஒன்று பட்­டால் உண்டு வாழ்வு என்ற ஆன்­றோர் வாக்­குக்கு ஒப்ப தமிழ் மக்­க­ளின் இன்­றைய நிலை – அவர்­க­ளின் அவ­சிய தேவை­கள் – முன்­னு­ரி­மை­கள் என்­ப­வற்றை கவ­னத்­தில் கொண்டு எல்லா வேறு­பா­டு­க­ளை­யும் மறந்து தமி­ழர்­கள் என்ற ரீதி­யில் இணைந்து செய­லாற்­றுங்­கள் என்று சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ரி­ட­மும் தமிழ் மக்­கள் பெய­ரால் வேண்டி நிற்­கி­றோம் – என்­றுள்­ளது.