Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

ஆர்னோல்ட் வேண்­டாம் கூட்டமைப்பிடம் கடிதம்!!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேய­ராக, முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சொல­மன் சிறிலை நிய­மிக்க வேண்­டும் எனக் கோரும் கடி­தம், கூட்­ட­மைப்பு கட்­சித் தலை­மை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. யாழ்ப்­பாண மாந­கர சபைத் தேர்­த­லில் வெற்­றி­பெற்ற வட்­டார உறுப்­பி­னர்­கள் சிலர் இணைந்து இந்­தக் கடி­தத்தை கைய­ளித்­துள்­ள­னர் என்­றும் அறி­ய­மு­டி­கின்­றது.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேயர் வேட்­பா­ள­ராக இ.ஆனோல்ட் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தார். ஆனால் முன்­னாள் நாடா­ளு­ட­மன்ற உறுப்­பி­னர் சொல­மன் சிறி­லுக்கு அந்­தப் பதவி வழங்­கப்­பட வேண்­டும் என்று ஆரம்­பத்­தி­லி­ருந்தே கட்­சிக்­குள் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு வந்­தது.

தற்­போது கூட்­ட­மைப்பு யாழ்ப்­பாண மாந­கர சபை­யில் ஆட்சி அமைத்­தால், மேயர் பதவி சொல­மன் சிறி­லுக்கு வழங்­கப்­பட வேண்­டும் எனக் கோரும் கடி­தம் கட்­சித் தலை­மை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, சொல­மன் சிறிலை மேய­ராக்க வேண்­டும் என்று செயற்­ப­டும் ஒரு குழு­வி­னர், யாழ்ப்­பாண மாந­கர சபை­யில் காங்­கி­ரஸ் கட்­சி­யு­டன் இணைந்து ஆட்சி அமைப்­பது தொடர்­பி­லும் இர­க­சி­யப் பேச்­சுக்­களை நடத்­தி­யுள்­ள­னர் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

யாழ்ப்­பாண மாந­கர சபை­யில் வெற்றி பெற்ற வட்­டார வேட்­பா­ளர்­கள் சிலரே இவ்­வாறு பேச்சு நடத்­தி­யுள்­ள­னர் என அறி­ய­மு­டி­கின்­றது.