Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

புரிந்துணர்வு அடிப்படையில் காங்கிரஸ்- தமிழரசு கூட்டு!!

இரு­த­ரப்­பை­யும் இணைக்க வர்த்­தக சங்­கம் தீவிர முயற்சி

வடக்­கில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் ஆட்சி அமைப்­ப­தில் தொங்கு நிலை ஏற்­பட்­டுள்­ளது. சபை­க­ளின் நிர்­வா­கத்தை திறம்­பட முன்­னெ­டுத்­துச் செல்­வ­தற்கு, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யை­யும், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யை­யும் இணைத்து ஆட்­சியை முன்­னெ­டுத்­துச் செல்­வ­தற்­கான முயற்­சி­கள், வர்த்­தக சங்­கத்­தா­லும், சிவில் அமைப்­புக்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளா­லும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இரு தரப்­புக்­க­ளு­டன் முதல்­கட்­டப் பேச்சு முடி­வ­டைந் துள்­ளது.

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் முடி­வு­க­ ளின்­படி வடக்­கில் 27 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கூடிய ஆச­னங்­க­ளை­யும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி இரண்டு சபை­க­ளில் கூடிய ஆச­னங்­க­ளை­யும் பெற்­றுக் கொண்­டுள்­ளன. எந்­த­வொரு கட்­சி­யும் தனித்து ஆட்சி அமைக்க முடி­யாத நிலமை எழுந்­துள்­ளது.

முன்­ன­ணி­யின் தலை­வர்­க­ளு­டன் நேற்­றுச் சந்­திப்பு நடத்­தப்­பட்­டுள்­ளது. கூட்­ட­மைப்­பு­ டன் இணைந்து ஆட்சி அமைப்­ப­தற்கு முன்­னணி இணங்­க­வில்லை. கூட்­ட­மைப்பு கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற சபை­க­ளில் அவர்­கள் ஆட்சி அமைக்­க­லாம். முன்­னணி எதிர்ப்பு வெளி­யி­டாது.

கூட்­ட­மைப்­பின் நல்ல திட்­டங்­களை ஆத­ரிக்­கும். தவ­றான விட­யங்­களை எதிர்க்­கும். இதே­போன்று, முன்­னணி ஆட்சி அமைக்­கும் சபை­க­ளில் கூட்­ட­மைப்­பும் செயற்­ப­ட­வேண்­டும் என்று முன்­ன­ணி­யின் தலை­வர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர். எந்­தெந்த சபை­க­ளில் தாங்­கள் ஆட்சி அமைப்­பது என்­பது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டிய பின்­னர், நாளை (இன்று) அறி­விப்­போம் என்று குறிப்­பிட்­டுள்­ள­னர்.

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சாவ­கச்­சேரி மற்­றும் பருத்­தித்­துறை நகர சபை­க­ளி­லேயே கூடு­த­லான ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்­டுள்­ள­னர். ஆனா­லும் நல்­லூர் பிர­தேச சபை­யில் முன்­னணி 5 ஆச­னங்­க­ளை­யும், முன்­னாள் அமைச்­சர் ஐங்­க­ர­நே­சன் தலை­மை­யி­லான சுயேச்­சைக் குழு 2 ஆச­னங்­க­ளை­யும் கைப்­பற்­றி­யுள்­ளது. இரண்டு தரப்­பும் இணை­வது தொடர்­பில் பேச்­சுக்­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.

சாவ­கச்­சேரி மற்­றும் பருத்­தித்­துறை நகர சபைக்கு மேல­தி­க­மாக நல்­லூர் பிர­தேச சபை­யி­லும் ஆட்சி அமைப்­ப­தற்கு முன்­னணி கோரக் கூடும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. இதற்கு இணங்­கி­னா­லேயே, புரிந்­து­ணர்வு அடிப்­ப­டை­யில் செயற்­ப­டு­வ­தற்கு அந்­தக் கட்சி தயா­ராக இருக்­கும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

கூட்­ட­மைப்­புச் சந்­திப்பு

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கூட்­டம் மார்ட்­டின் வீதி­யில் நேற்று மாலை நடை­பெற்­றுள்­ளது. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ராசா, ரெலோ அமைப்­பின் தலை­வர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன், புளொட் அமைப்­பின் தலை­வர் த.சித்­தார்த்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் உள்­ளிட்­டோர் கலந்து கொண்­டுள்­ள­னர்.

சபை­களை குழப்­ப­க­ர­மாக விடக் கூடாது என்று இந்­தச் சந்­திப்­பில் பேசப்­பட்­டுள்­ளது. சபை­களை சுமு­க­மாக முன்­னெ­டுக்க வர்த்­தக சங்­கம் மற்­றும் சிவில் அமைப்­புக்­க­ளால் முன்­னெ­டுக்­கப்­ப­டும் முயற்சி குறித்­தும் பேசப்­பட்­டுள்­ளது.