Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

கேப்பாபிலவு மக்கள் உரி­மைக்­காக போரா­ட­லாம் !!

தங்­க­ளது சொந்த நிலத்தை விடு­விக்­கக் கோரி கேப்­பாபி­ல­வில் போராட்­டத்தை முன்­னெ­டுத்­து­ வ­ரும் மக்­கள், பொது­மக்­க­ளுக்கு இடை­யூ­றின்றி போராட்­டத்­தைத் தொட­ர­லாம் என்று ஆணை வழங்கி­யது முல்­லைத்­தீவு நீதி­மன்று.

கேப்­பாபில­வில் போராட்­டம் மேற்­கொண்ட மக்­கள் மீது முள்­ளி­ய­வளை பொலி­ஸார் மேற்­கொண்ட வழக்கு விசா­ரணை நேற்று முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றில் எடுத்­துக்­ கொள்­ளப்­பட்­டது. அதன்­போதே இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­க­பட்டது.

கேப்­பாபி­ல­வுப் பூர்வீ­கக் கிரா­மத்தை மீட்­ப­தற்­காக கடந்த வரு­டம் மார்ச் மாதம் முத­லாம் திகதி ஆரம்­பித்த நில மீட்­புப் போராட்­டம் நேற்று 349 ஆவது நாளா­க­வும் தொடர்ந்­தது.

கேப்­பாபி­லவு மக்­க­ளுக்கு சொந்­த­மான காணி­க­ளில் படை­யி­னர் அப­க­ரித்­துள்ள காணி­க­ளில் இருந்து 133.4 ஏக்­கர் காணி­கள் கடந்த வரு­டம் மார்­கழி 28ஆம் திகதி மாவட்­டச் செய­ல­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டன.

கேப்­பாபி­ல­வில் 111.5 ஏக்­கர் காணி­யும், சீனி­யா­மோட்­டைப் பகு­தி­யில் 21.84 ஏக்­கர் காணி­யு­மாக அந்த 133.34 ஏக்­கர் காணி­யும் விடு­விக்­கப்­பட்­டது.

ஆனால் கேப்­பாப்­பி­லில் 104 குடும்­பங்­க­ளுக்­குச் சொந்­த­மான 181 ஏக்­கர் காணி­கள் இன்­னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. அந்­தக் காணி­களை விடு­விக்­கும் வரை தமது போராட்­டம் தொட­ரும் என்று தெரி­வித்து மக்­கள் போராட்­டம் நடத்­தி­வ­ரு­கின்­ற­னர்.

கடந்த 4ஆம் திகதி இலங்­கை­யின் 70 ஆவது சுதந்­திர தின நிகழ்வை அவர்­கள் துக்­க­தி­ன­மாக அறி­வித்து கேப்­பாப்­பி­ல­வில் விடு­விக்­கப்­பட்ட பகு­தி­யில் உள்ள ஆல­யத்­துக்கு நேர்த்­திக்­க­டன் வைத்து வழி­ப­டச் சென்­ற­னர். அவர்­களை பொலி­சார் இடை­ம­றித்­த­தால் குழப்ப நிலை ஏற்ப்­பட்­டது.

அதன் தொடர்ச்­சி­யாக கேப்­பா­பு­லவு மக்­கள் 5 பேர் மீது முள்­ளி­ய­வ­ளைப் பொலி­சா­ரால் முல்­லைத்­தீவு நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­த­னர். சமா­தா­னத்­துக்கு குந்­த­கம் ஏற்­ப­டுத்­தி­னர் என்றே வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

அந்த வழக்கு நேற்று முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்ற நீதி­வான் எஸ்.லெனின்­கு­மார் விசா­ர­ணையை மேற்­கொண்­டார்.

மன்­றில் வழக்கு தொடு­நர்­க­ளான முள்­ளி­ய­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி மற்­றும் எதிர்­த­ரப்பு வாதி­க­ளான கேப்­பா­பு­லவு போராட்­டத்­தில் ஈடு­பட்ட மக்­கள் ஜவர் முன்­னி­லை­யாகி இருந்­த­னர் . சட்­டத்­த­ர­ணி­க­ளான வி.மணி­வண்­ணன், பரஞ்­சோதி உள்­ளிட்ட முல்­லைத்­தீவு மாவட்­டத்­தைச் சேர்ந்த சட்­டத்­த­ர­ணி­கள் கேப்­பாப்­பி­லவு மக்­க­ளுக்­காக முன்­னி­லை­யா­கி­னர்.

வழக்­கின் விசா­ர­ணை­க­ளின் பின்­னர் எதிர்­கா­லத்­தி­லும் கேப்­பாப்­பி­லவு மக்­கள் தமது ஜன­நா­யக உரி­மைக்­கா­கப் போரா­ட­லம் என்­றும் மக்­கள் பொது அமை­திக்கு பங்­கம் விளை­விக்­கும் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டாது தமது போராட்­டத்தை முன்­னெ­டுக்­க­லாம் என்ற அறி­வு­றுத்­தலை வழங்கி நீதி­பதி வழக்­கைத் தள்­ளி­வைத்­தார்.

கேப்­பா­பி­லவு மக்­கள் போராட்­டம் ஆரம்­பித்த காலப்­ப­கு­தி­யி­லும் பொலி­ஸார் வழக்கு ஒன்­றைத் தொடர்ந்­தி­ருந்­த­னர். மக்­கள் பொது அமை­திக்­குப் பங்­கம் விளை­விக்­கும் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டாது போராட்­டத்தை முன்­னெ­டுக்­க­லாம் என்று அப்­போ­தும் நீதி­மன்று உத்­த­ர­விட்­டி­ருந்­தது.