Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

சிவ­ராத்­திரி தினத்தை கொச்­சைப்­ ப­டுத்­தா­தீர்!!

யாழ். இந்­தி­யத் துணைத்­தூ­த­ரக கொன்­சி­யூ­ல­ரி­டம் கோரிக்கை

யாழில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கத்­தின் ஏற்­பாட்­டில் சிவ­ராத்திரி நாளில் கீரி­மலை நகு­லேஸ்­வ­ரர் ஆல­யத்­தில் நடை­பெ­றும் பட்­டி­மன்­றத்தை நிறுத்த வேண்­டும் என்று இந்து சம­யப் பேரவை கோரி­யுள்­ளது. இந்­துக்­க­ளின் புனி­த­மான சிவ­ராத்­திரி தினத்தைக் கொச்­சைப்­ப­டுத்த வேண்­டாம் என்­றும் அந்த அமைப்பு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.

இது தொடர்­பில் யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள துணைத் தூத­ர­கத்­தின் கொன்­சி­யூ­லர் ஜென­ரல் ஆ.நட­ரா­ஜ­னுக்கு நேற்­று­முன்­தி­னம் இந்து சம­யப் பேர­வை­யின் செய­லர் சி.சக்­தி­கி­ரீ­வன் அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தின் ஊடாக இந்­தக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தக் கடி­தத்­தில் உள்­ள­தா­வது-,

கீரி­மலை நகு­லேஸ்­வ­ரர் ஆல­யத்­தில் பட்­டி­மன்­றம் நடத்­தத் திட்­ட­மிட்­டி­ருப்­ப­தை­யிட்டு பெரும் மன வேத­னை­ய­டை­கின்­றோம்.
இந்­தப் பட்­டி­மன்­றத்­தில் இந்­திய தமிழ் அறி­ஞர்­கள் பங்­கு­பற்றி இந்­துக்­க­ளின் புனி­த­மான சிவ­ராத்­திரி தினத்­தைக் கொச்­சைப்­ப­டுத்­து­வது உண்­மை­யான சிவ­ன­டி­யார்­க­ளின் மனங்­களை வெதும்ப வைத்­துள்­ளது.

விரத அனுஷ்­டா­னத்­தில் ஈடு­ப­டு­வோ­ரின் சிந்­த­னையை வேறு திசைக்கு திருப்­பு­வ­தாக அமை­கின்­றது. இந்­தி­யா­வுக்­கும், இலங்­கைக்­கும் இடையே ஆன்­மீ­கப் பாலத்தை ஏற்­ப­டுத்த விரும்­பின், அங்­குள்ள ஆதீன குரு­மகா சந்­நி­தா­னங்­க­ளை­யும், ஓது­வார் மூர்த்­தி­க­ளை­யும், பரத நாட்­டி­யக் கலை­ஞர்­க­ளை­யும் அழைத்து வந்­தி­ருந்­தால் மகிழ்­சி­யாக இருந்­தி­ருக்­கும்.

சிவ­ராத்­தி­ரியை இலக்­கிய விழா­வாக மாற்­றத் திட்­ட­மிட்­டி­ருப்­பது இலங்கை வாழ் இந்­துக்­கள் செய்த தவக்­கு­றை­வா­கும். சிவ­ராத்தி தினத்­தில் நடத்­து­வதை நிறுத்தி, வேறு நாளில் நடத்த பொருத்­த­மான நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் – என்­றுள்­ளது.