Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பெரும் செல­வில் ஏற்­பா­டு­கள் -நிறுத்த முடி­யாது!

கோடிக் கணக்­கான ரூபா செலவு செய்து பட்­டி­மன்­றம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அதை நிறுத்த முடி­யாது என்று இந்து சம­யப் பேர­வை­யின் பிர­தி­நி­தி­க­ளி­டம் யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கத்­தின் கொன்­சி­யூ­லர் ஜென­ரல் தெரி­வித்­துள்­ளார் என்று அறி­ய­மு­டி­கின்­றது.

சிவ­ராத்திரி நாளைக் கொச்­சைப்­ப­டுத்­தும் விதத்­தில், கீரி­மலை நகு­
லேஸ்­வ­ரர் ஆல­யத்­தில் பட்­டி­மன்­றம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது, அதை நிறுத்த வேண்­டும் என்று இந்து சம­யப் பேர­வை­யின் செய­ல­ரால், கொன்­சி­யூ­லர் ஜென­ர­லுக்கு கடி­தம் அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­டல் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றுள்­ளது.

அந்­தக் கூட்­டத்­தில் கலந்து கொண்ட இந்து சம­யப் பேர­வை­யின் பிர­தி­நி­தி­க­ளி­டமே மேற்­கண்­ட­வாறு கூறப்­பட்­டுள்­ளது என்று அறிய முடி­கின்­றது. இதே­வேளை நேற்று முன்­தி­னம் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின் பின்­னர், இந்து சம­யப் பேர­வை­யின் செய­ல­ரால் நேற்று மாலை மீண்­டும் கடி­தம் ஒன்று இந்­தி­யத் தூத­ர­கத்­தின் கொன்­சி­யூ­லர் ஜென­ர­லுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

“இந்­தி­யா­வுக்­கும் இந்து மதத்­துக்­கும் எதி­ரா­ன­வர்­கள் எங்­கும் பரந்து செயற்­ப­டு­கின்­றார்­கள். அவர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வது கடி­னம். இவர்­கள் பொன்­னாடை, மாலை, பட்­டம், பதவி, மேடை, சுற்­றுலா போன்­ற­வற்­றிற்­காக அலை­ப­வர்­கள். எதை­யும் செய்­யத் தயங்­க­மாட்­டார்­கள்.
ஆல­யத்­தில் பட்­டி­மன்­றத்தை நிறுத்த வேண்­டும் என்று இந்து சம­யப் பேர­வை­யின் கூட்­டத்­தில் முடிவு எடுக்­கப்­ப­ட­வில்லை என்று, எமக்கு எதி­ரான கருத்­துக்­களை கூறு­வோர், கூட்­டத்­தில் கூறி­ய­தாக அறிந்­தோம்.

ஆல­யத்­தில் வீண் வார்த்தை பேசக் கூடாது என்­பது பிர­மா­ணம். இதற்கு கூட்­டம் கூடி முடிவு எடுக்க வேண்­டும் என்று கூறும் புத்­தி­சா­லி­களை எப்­படி வர்­ணிப்­பது?. எமது இந்து சம­யப் பேர­வை­யின் தலை­வர் பேரா­சி­ரி­யர் சி.க.சிற்­றம்­ப­லத்­து­டன் பேசி­ய­போது, தான் இந்த விட­யம் தொடர்­பா­கப் பேச­வில்லை என்று மறுத்­தார். தங்­கள் பேச்சு ஒலிப் பதி­வில் உள்­ளது என்று கூறிய பின்­னர் பல­முறை மன்­னிப்­புக் கோரி­னார். இவர்­கள் எல்­லாம் இந்­தி­யா­வுக்­கும், இந்து மதத்­திற்­கும் எதி­ராக கருத்­துக் கூறும் தமிழ் வேட­தா­ரி­கள்.

இப்­ப­டி­யா­ன­வர்­களை ஏன் பேர­வை­யில் சேர்த்து வைத்­தி­ருக்­கின்­றீர்­கள் என்று நீங்­கள் என்­னி­டம் கேட்­க­லாம். தங்­க­ளு­டைய அலு­வ­ல­கத்­தில் உள்ள கலா­சார உத்­தி­யோ­கத்­தரே, பட்­டி­மன்ற நிகழ்வை ஒழுங்கு செய்­துள்­ளார் என்­றால் எனது நிலை எப்­படி இருக்­கும் என்று ஏன் நீங்­கள் சிந்­திக்­கக் கூடாது?”- என்று அந்­தக் கடி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.