Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு!!

ஆளும்­கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக் கட்சி உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் பின்­ன­டைவைச் சந்­தித்­துள்­ள­தால் அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ரான தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­வர் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்­டும் என்று அவ­ரது கட்­சி­யி­னரே கூட்­டாக வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர். அது ரணி­லுக்­குப் பெரும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அத்­து­டன் கூட்­ட­ர­சின் பய­ணம் 2020ஆம் ஆண்­டு­வரை தொடர வேண்­டு­மா­னால் தலைமை அமைச்­சர் பத­வி­யை­யும் அவர் துறக்­க­வேண்­டு­மென விடுக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கை­யும் பேரி­டி­யாக அமைந்­துள்­ளது.

அடுத்­து­வ­ரும் 48 மணி­நே­ரத்­துக்­குள் தீர்க்­க­மா­ன­தொரு முடிவை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எடுப்­பா­ரென அவ­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது.

கட்­சித் தலை­மைப் பத­வியை சஜித் பிரே­ம­தா­ச­வி­ட­மும், தலைமை அமைச்­சர் பத­வியை கரு ஜெய­சூ­ரி­ய­வி­ட­மும் ஒப்­ப­டைப்­பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. கொழும்பு அர­சி­ய­லில் ஏற்­பட்­டுள்ள திடீர் மாற்­ற­மா­னது நாடு முழு­வ­தும் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அரச தலை­வர் தேர்­தல், பொதுத்­தேர்­தல் ஆகி­ய­வற்­றில் மண்­கவ்­விய மகிந்த அணி, உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில்  விஸ்­வ­ரூ­ப­மெ­டுத்­துள்­ளது. அது தெற்­கில் பெரும் அர­சி­யல் புயலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மத்­திய அர­சில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­ம­ள­வுக்கு அதன் தாக்­கம் அமைந்­துள்­ளது.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­க­ளுக்­கும், கட்­சித் தலை­வ­ரான தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று நேற்று மாலை அல­ரி­மா­ளி­கை­யில் நடை­பெற்­றது. அதில் தேர்­தல் முடி­வு­கள் பற்­றி­யும், கட்­சி­யின் எதிர்­கா­லம் தொடர்­பா­க­வும் விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய தேசி­யக் கட்சி வெற்­றிப்­பா­தை­யில் பய­ணிக்க வேண்­டு­மா­னால் கட்சி தலை­மைத்­து­வத்­தில் மாற்­ற­மொன்று அவ­சி­ய­மென அதில் வலி­யு­றுத்­தப்­பட்­டது என்­றும், இரண்­டாம் அணிக்கு அதற்­கு­ரிய வாய்ப்­ப­ளிக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது என்­றும் பிரதி அமைச்­சர் வசந்த சேனா­நா­யக்க தெரி­வித்­தார். அர­சி­லும் மாற்­ற­மொன்று ஏற்­ப­ட­வேண்­டு­மென்­றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது என­வும் அவர் கூறி­னார்.

“இந்­தக் கோரிக்­கை­களை ரணில் செவி­ம­டுத்­தார். வழ­மையை விட­வும் உன்­னிப்­பாக இளம் உறுப்­பி­னர்­க­ளின் கருத்­து­களை அவர் செவி­ம­டுத்­தார். தலை­வரை என்­னால் உரு­வாக்க முடி­யாது. தலை­மைத்­து­வம் என்­பது தானாக உரு­வாக வேண்­டும் என்று ரணில் எம்­மி­டம் கூறி­னார். கட்­சி­யின் வெற்­றிக்­காக அவர் தலை­மைப் பத­வி­யைத் துறப்­ப­தற்கு இணங்­கு­வார் என்றே நம்­பு­கின்­றோம்” – என்று சந்­திப்­பில் கலந்­து­கொண்ட பிரதி அமைச்­சர் ரஞ்­சன் ராம­நா­யக்க நேற்­றி­ரவு தெரி­வித்­தார்.

கட்­சிக்­குள் ஏற்­ப­ட­வேண்­டிய மறு­சீ­ர­மைப்­பு­கள் தொடர்­பில் பிரதி அமைச்­சர் ஹர்ச டி சில்­வா­வும் கருத்து வெளி­யிட்­டுள்­ளார். விமர்­ச­னங்­க­ளைத் தனிப்­பட்­ட­வை­யா­கக் கரு­தாது, மாற்­ற­மொன்று வேண்­டு­மென்ற மக்­கள் ஆணை­யாக கருத வேண்­டும் என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

அனை­வ­ரி­ன­தும் கருத்­து­க­ளை­யும் கேட்­ட­றிந்த ரணில், அரச தலை­வ­ரு­டன் பேச்சு நடத்­தி­விட்டு முடி­வொன்றை அறி­விப்­பேன் என்று கூறி­விட்டு அரச தலை­வ­ரைச் சந்­திக்­கச் சென்­றுள்­ளார். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தவி­சா­ளர் அமைச்­சர் மலிக் சம­ர­விக்­கி­ரம, பொதுச்­செ­ய­லர் கபீர் ஹாசீம் ஆகி­யோ­ரும் உடன் சென்­றுள்­ள­னர்.

அரச தலை­வ­ரு­டன் அமைச்­சர் மகிந்த அம­ர­வீ­ர­வும் சந்­திப்­பில் கலந்­து­கொண்­டுள்­ளார். நேற்­றி­ரவு 8.45 மணி­ய­ள­வில் சந்­திப்பு ஆரம்­ப­மா­கி­யது. இரவு 11 மணி தாண்­டி­யும் அது தொடர்ந்­தது.
அதில் தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்க வில­க­வேண்­டு­மென்ற சு.க. அமைச்­சர்­க­ளின் நிலைப்­பாட்டை அரச தலை­வர் அறி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பில் நாளை (இன்று) சிறப்பு அறி­விப்­பொன்றை விடுக்­க­வுள்­ளார் என்­றும், தான் முடி­வொன்றை எடுத்து அறி­விப்­ப­தற்­குள் நீங்­கள் முடி­வொன்றை எடுங்­கள் என்று மைத்­திரி, ரணி­லுக்கு ஆலோ­சனை வழங்­கி­னார் என்­றும் அறி­ய­மு­டி­கின்­றது.

அனைத்­துத் தரப்­பு­க­ளும் கைவி­ரித்­துள்­ளால் ரணில் தீர்க்­க­மான முடி­வொன்றை எடுப்­பார் என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதே­வேளை, ஐ.தே.கவின் தலை­மைப் பொறுப்பை ரணில் துறக்­கும் பட்­சத்­தில் கட்­சி­யின் தலை­மைப் பத­விக்கு சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய அல்­லது சஜித் பிர­மே­தாச ஆகிய இரு­வ­ரில் ஒரு­வர் தெரி­வு­செய்­யப்­ப­ட­லாம் என்­றும், தலைமை அமைச்­சர் பத­வி­யி­லும் மாற்­றம் வரக்­கூ­டும் என்­றும் நம்­ப­க­ர­மான வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது. தலைமை அமைச்­சர் பத­வி­யில் மாற்­றம் வரும் பட்­சத்­தில் கூட்­ட­ரசு தொட­ரும் என்றே கரு­தப்­ப­டு­கின்­றது.