Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

அல்லிப்பளையில் உள்ள குப்பை கொட்டுமிடம் சீரமைக்கப்படவில்லை!!

பிரதேச மக்கள் குற்றச்சாட்டு

அல்லிப்பளைப் பகுதியில் காணப்படுகின்ற பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் குப்பை கொட்டுமிடம் தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டும் இதுவரை சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

‘கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபைக்கு உட்­பட்ட கிரா­மமே பச்­சி­லைப்­பள்ளி கிரா­மம் ஆகும். குறித்த கிரா­மத்­தில் பிர­தேச சபை­யி­ன­ரால் எடுக்­கப்­ப­டு­கின்ற குப்­பை­கள் அல்­லிப்­பளை பிர­தே­சத்­தில் கொட்­டப்­பட்டு வரு­கின்­றன. குப்­பை­க­ளால் கிரா­மத்­தில் துர்­நாற்­றம் வீசு­வ­து­டன் நுளம்பு பெருக்­க­மும் காணப்­ப­டு­கின்­றது.

குறித்த பகு­தி­யில் கிடங்­கு­கள் காணப்­ப­டு­வ­தால் மழை காலத்­தில் நீர் தேங்கி நின்று நுளம்பு பெருக்­கம் ஏற்­ப­டு­கின்­றது. அத்­தோடு குறித்த கிடங்­கில் உள்ள நீரைக் குடித்த கால்­ந­டை­கள் இறந்­தி­ருக்­கின்ற சம்­ப­வம்நிகழ்ந்­தி­ருக்­கின்­றது.

அத்­தோடு அதற்­கான வேலி இன்­மை­யால் விலங்­கு­கள், பற­வை­கள் அங்கு சென்று குப்­பை­களை காவி­வந்து மக்­க­ளின் வீடு­க­ளுக்கு அரு­கில் போடு­வ­தால் தொற்றா நோய்­கள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் காணப்­ப­டு­கின்­றன.

இதனை நிவர்த்தி செய்­ய­மாறு பல வழி­க­ளி­லும் போராட்­டங்­கள் நடத்­தி­ய­போ­தும் இது­வரை அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை’ என கிராம மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.  இது தொடர்­பாக பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபை­யின் செய­லா­ள­ரி­டம் கேட்­ட­போது அதற்­கான நிதி கடந்த வரு­டமே ஒதுக்­கப்­பட்டு விட்­டது.

கடந்த டிசெம்­பர் மாதம் அள­வில் வேலை­கள் ஆரம்­பிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­ட­போ­தும் மழை கார­ண­மாக செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. தற்­போது சபை வந்­தி­ருப்­ப­தன் கார­ணத்­தால் அவர்­கள் கூடாக இந்த வேலை­களை செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் செய்­யப்­ப­டும் என தெரி­வித்­தார்.