Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

புதிய ஆயரை வரவேற்ற மன்னார் பங்குச் சமூகம்!!

தலை­மன்­னார் பங்­கு­மக்­க­ளால் புதிய ஆயர் பேர­ருட் கலா­நிதி பிடெ­லிஸ் லய­னல் இம்­ம­னு­வேல் ஆண்­ட­கைக்கு மாபெ­ரும் வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

தலை­மன்­னார் பங்­கின் தாய்க்­கோ­யி­லாக விளங்­கு­வது புனித லோறன்­சி­யார் தேவா­ல­ய­மா­கும். இதன் துணைப்­பங்­கு­க­ளாக தலை­மன்­னார் பியர் தலை­மன்­னார் ஸ்ரேசன் கிரா­மங்­க­ளின் ஆல­யங்­கள் விளங்­கு­கின்­றன.

மன்­னார் மறை­மா­வட்­டத்­தின் மூன்­றா­வது ஆய­ரா­கிய பேர­ருட் கலா­நிதி பிடெ­லிஸ் லய­னல் இம்­ம­னு­வேல் ஆண்­ட­கையை வர­வேற்க வீதி­கள் அனைத்­தும் தூய்­மைப்­ப­டுத்தப்­பட்­டு­ வீ­தி­கள் அலங்­க­ரிக்­கப்­பட்டு தலை­மன்­னார் முழு­வ­தும் விழாக்­கோ­லம் பூண்­டது.

நேற்­று­முன்­தி­னம் மாலை 5.30 மணி­ய­ள­வில் தலை­மன்­னார் முச்­சந்­தி­யில் இருந்து ஆயர் வர­வேற்­கப்­பட்­டார். வாகன பவ­னி­யின் பொழுது தலை­மன்­னார் ஸ்ரேசன் மாதா­கோ­யில் வளா­கத்­தில் தலை­மன்­னார் ஸ்ரேசன் மற்­றும் தலை­மன்­னார் பியர் மக்­க­ளால் ஆய­ருக்கு மாலை அணி­வித்து மதிப்­ப­ளிக்­கப்­பட்டு தலை­மன்­னார் லோறன்ஸ் றோ.க.த.க.
பாட­சாலை மாண­வர்­க­ளின் பேண்ட் வாத்­தி­ய­க­ருவி இசைக்­கப்­பட்டு பவ­னி­யு­டன் புனித லோறன்­சி­யார் தேவா­ல­யத்­தின் பிர­தா­ன­வா­யில்­வரை சென்­றது.

அங்கு தமி­ழர் பாரம்­ப­ரிய முறைப்­படி வர­வேற்பு நட­னத்­து­டன் ஆயர் வர­வேற்­கப்­பட்­டார். பங்­கு­மக்­கள் சார்­பாக 3 ஆல­யங்­க­ளை­யும் சேர்ந்த ஆல­ய­சபை உறுப்­பி­னர்­க­ளி­னால் பொன்­னாடை போர்த்­தப்­பட்டு நினை­வுச் சின்­ன­மும் ஆய­ருக்கு வழங்­கி­வைக்­கப்­பட்­டது.