Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

அனு­ம­திப்­பத்­தி­ரம் இன்றி மணல் ஏற்­றிய வாக­னங்­கள் கைப்­பற்று!!

அனு­ம­திப்­பத்­தி­ரம் இன்றி மணல் ஏற்­றிய டிப்­பர் மற்­றும் உழ­வி­யந்­தி­ரம் என்­பன கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன என்று பளைப் பொலிஸ் நிலை­யத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பளை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் நாலா புற­மும் தொடர் மணல் அகழ்­வு­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. அதன் கார­ண­மாக சில பிர­தே­சங்­க­ளில் கடல் நீர் கிரா­மத்தை நோக்கி வர ஆர­ம்ப்­பித்­துள்­ளது.

அந்த வகை­யில் நேற்­றை­ய­தி­னம் புலோப்­பளை பகு­தி­யில் அனு­ம­திப்­பத்­தி­ரம் இன்றி மணல் ஏற்­றிய உழ­வி­யந்­தி­ரம் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­து­டன் சார­தி­யும் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார். விசா­ர­ணை­க­ளின் பின்­னர் பொலிஸ் பிணை வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

அதே­போல் இத்­தா­வில் பகு­தி­யில் அனு­ம­திப்­பத்­தி­ரம் இன்றி மணல் ஏற்­றிய டிப்­பர் வாக­னம் கைப்­பற்­றப்­பட்­ட­து­டன் சார­தி­யும் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார். மேல­திக விசா­ர­ணை­க­ளின் பின்­னர் கிளி­நொச்சி நீதி­மன்­றில் முற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என பளைப் பொலிஸ் நிலைய தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.