Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

தண்­டு­வான் அ.த. க. பாட­சா­லையின் கலை அரங்­கம் திறப்பு !!

முல்­லைத்­தீவு தண்­டு­வான் அர­சி­னர் தமிழ் கல­வன் பாட­சா­லைக்கு பாட­சா­லை­யின் வளர்ச்சி கருதி அய­ரா­து­ழைத்த அம­ரர் வே.சுப்­பி­ர­ம­ணி­யம் உடை­யா­ரின் நினை­வாக பாட­சா­லை­யில் கலை அரங்­கம் ஒன்று அமைத்­துக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

1942 காலப்­ப­கு­தி­க­ளில் சிறிய அள­வி­லி­ருந்த இந்­தப் பாட­சாலை இன்று பல­கட்­ட­டங்­க­ளோ­டும் பல ஆசி­ரிய வளங்­க­ளோ­டும் பவள விழாக் காணு­ம­ள­வுக்கு வளர்ச்சி பெற­வைத்த பெருமை தண்­டு­வான் மக்­க­ளை­யே­சா­ரும். இதற்கு அடித்­த­ள­மாக விளங்­கி­ய­வர் அம­ரர் வே.சுப்­பி­ர­ம­ணி­யம் உடை­யா­ரா­வர்.

அவ­ரின் ஞாப­கார்த்­த­மாக அவ­ரது உற­வு­க­ளால் பாட­சா­லை­யில் கலை­ய­ரங்­கம் ஒன்று அமைக்­கப்­பட வேண்­டும் என்­ப­தற்­க­மைய உற­வு­க­ளின் நிதி­யீட்­டத்­தில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு கடந்த 23ஆம் திகதி இடம்­பெற்ற பாட­சா­லை­யின் பவ­ள­வி­ழா­வில் உற­வி­னர் ச.தியா­க­ராசா என்­ப­வ­ரால் வைபவ ரீதி­யாக நாடாவை வெட்டி திறந்து வைத்து பாட­சா­லைக்கு கைய­ளிக்­கப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­ட­து.

பாட­சாலை வளர்ச்சி கருதி பாட­சா­லை­க­ளுக்கு புலம்­பெ­யர் உற­வு­க­ளால் நன்­கொ­டை­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.