Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

தனி அரசு அமைக்க ரணில் தீவிர முயற்சி

கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளிக்­க­லாம்

கூட்­ட­ர­சி­லுள்ள சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் குத்­துக் கர­ண­ம­டிக்­கத் தயா­ரா­கி­வ­ரும் நிலை­யில், தனி­யாட்சி அமைப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வ­ரான தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளார்.

இது தொடர்­பில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் கூட்­டணி வைத்­துள்ள கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளு­ட­னும் அவர் பேச்சு நடத்­தி­யுள்­ளார்.
நாடா­ளு­மன்­றத்­தில் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு 106 ஆச­னங்­கள் இருக்­கின்­றன. இன்­னும் ஏழு ஆச­னங்­க­ளைப் பெற்­றால் தனி­யாட்சி அமைப்­ப­தற்­கு­ரிய கோரிக்­கையை சபா­நா­ய­க­ரி­டம் விடுக்­க­மு­டி­யும்.

ஐக்­கிய தேசி­யக் கட்சி தனி அரசு அமைப்­ப­தற்கு 16 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் உள்ள தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் ஆத­ரவு வழங்­கக் கூடும் என்று கொழும்பு அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் பேசப்­ப­டு­கின்­றது. கூட்­ட­மைப்­பு­டன் சேர்ந்து அரசு அமைப்­ப­தற்கு ஐக்­கிய தேசி­யக் கட்­சித் தலை­வர்­கள் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கின்­ற­னர் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதே­வேளை, ஐக்­கிய தேசி­யக் கட்சி தனி அரசு அமைத்­தால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­குமா என்று கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ர­னி­டம் கேட்­ட­போது, அது தொடர்­பில் இப்­போது சொல்ல முடி­யாது – என்­றார்.

இதற்­கி­டை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குள் அதன் தலை­வ­ரான தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக இர­க­சிய சூழ்ச்­சித் திட்­ட­மொன்று வகுக்­கப்­ப­டு­கின்­றது என்­றும் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

தலை­வர் பத­வியை தற்­கா­லி­க­மாக துறந்­து­விட்டு அந்த இடத்­துக்கு சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரி­யவை நிய­மிக்க வேண்­டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது என­வும், இந்த யோச­னைக்கு 30க்கும் மேற்­பட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ள­னர் என­வும் அறி­ய­மு­டி­கின்­றது.

இந்த நிலை­மை­யில் தமது கட்­சி­யின் அனைத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும் இன்று மதி­யம் 3 மணிக்கு அல­ரி­மா­ளி­கைக்கு வரு­மாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்­துள்­ளார்.

தனி­யாட்சி அமைப்­பது பற்­றி­யும், தலை­மைத்­து­வம் தொடர்­பில் எழுந்­துள்ள பிரச்­சி­னை­கள் சம்­பந்­த­மா­க­வும் இதன்­போது ஆழ­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்டு உறு­தி­யான முடி­வொன்று எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.