Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

இணைத்தலைவர்கள் பங்கேற்காத ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!!

இணைத்தலைவர்கள் எவருமே இல்லாமல் பிரதேச செயலர் தலைமையில் யாழ்ப்பாணப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:
யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் நேற்­றை­ய­தி­னம் இணைத்­த­லை­வர்­கள் எவ­ருமே பங்­கு­பற்­றா­மை­யால் யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­ல­ர் தலை­மை­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளது.

பிர­தேச செய­ல­கத்­தின் ஒருங்­கி­ணைப்­புக்­குழு கூட்­டத்­துக்­கான கடி­தங்­கள் அனுப்பி வைக்­கப்­பட்­ட­போ­தி­லும் கூட்­டத்­துக்கு தலைமை தாங்க ஒரு­வர்கூட வர­வில்லை என பிர­தேச செய­லர் தெரி­வித்­துள்­ளார்.

யாழ்ப்­பா­ணப் பிர­தே­சத்­தின் அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் தொடர்­பாக இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் ஆரா­யப்­பட்ட போதி­லும் இணைத்­த­லை­வர்­கள் இல்­லா­மை­யால் எந்த முடி­வு­க­ளும் எடுக்­கப்­ப­டா­மல் கூட்­டம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த கூட்­டத்­தில் மது­பான சாலை அனு­ம­திப்­பத்­தி­ரம் வழங்­கு­தல், முஸ்­லிம் மக்­க­ளின் குடி­யமர்­­வு, சுகா­தாரத்துறை சார்ந்த விட­யம் என சில விட­யங்­கள் ஆராயப்­பட்­டுள்­ளன. இவை தொடர்­பாக கருத்­துக்­கள் முன்­வைக்­கப்­பட்­ட­போ­தி­லும் முடி­வு­கள் எது­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

‘அரச தலை­வர் செய­ல­கத்­தால் அறி­விக்­கப்­பட்ட திக­தி­யில் கூட்­டம் நடத்­தப்­பட்­டது. கூட்­டத்­தில் கலந்து கொள்ள இணைத்­த­லை­வர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. ஆனா­லும் அவர்­கள் கலந்து கொள்­ள­வில்லை. இத­னால் தீர்­மா­னம் எது­வும் எடுக்­கா­மல் கூட்­டம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது’ என பிர­தேச செய­லா­ளர் தெரி­வித்­தார்.

இதே­வேளை யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­லக ஒருங்­கி­ணைப்­புக்­குழு கூட்­டத்­தின் இணைத் தலை­வர்­க­ளாக வடக்கு மாகாண முதல்­வர் விக்­னேஸ்­வ­ரன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, அங்­க­ஜன், இரா­ஜாங்க அமைச்­சர் விக­ஜ­ய­கலா ஆகி­யோர் அங்­கம் வகிக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.