Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

சு.க. உறுப்­பி­னர்­கள் பல்டி- மகிந்­த­வு­டன் சங்­க­மம்!!

குட்­டித் தேர்­த­லில் மகிந்த அலை கோலோச்­சி­ய­தால் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அர­சி­யல் ரீதி­யாக பெரும் பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ளது.

அவ­ருக்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்த தொகுதி அமைப்­பா­ளர்­க­ளுள் முக்­கிய உறுப்­பி­னர்­கள் சிலர் மகிந்­த­வு­டன் சங்­க­மிக்­க­வுள்­ள­னர். அர­சி­யல் உறு­தி­யற்ற தன்மை, மாகாண சபைத் தேர்­தல் உட்­பட மேலும் சில கார­ணங்­க­ளைக் கருத்­திற் கொண்டே அவர்­கள் இந்த முடிவை எடுத்­துள்­ள­னர் என்­றும், நாளை பசில் ராஜ­பக்­ச­வு­டன் அவர்­கள் முக்­கி­யத்­து­வ­மிக்க பேச்சை நடத்­த­வுள்­ள­னர் என்­றும் அறி­ய­மு­டி­கின்­றது.

அத்­து­டன், சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­கள் சில­ரும் மகிந்­த­வு­டன் பேச்சு நடத்தி வரு­கின்­ற­னர். தேசி­யப்­பட்­டி­யல் மூலம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­ன­வர்­களே மைத்­தி­ரிக்­குத் தற்­போது ஆறு­த­லாக இருந்து வரு­கின்­ற­னர்.

தலைமை அமைச்­சர் பத­வி­யில் மாற்­றம் ஏற்­ப­டும் பட்­சத்­தில் கூட்டு அரசை 2020ஆம் ஆண்­டு­வரை தொட­ர­லாம் என்ற நிலைப்­பாட்­டி­லேயே சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­கள் சிலர் இருக்­கின்­ற­னர். எனி­னும், சில அமைச்­சர்­கள் இந்த விட­யத்­தில் மதில்­மேல் பூனை நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கின்­ற­னர். நேற்று நடை­பெற்ற சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சிக் கூட்­டத்­தி­லும் இது பற்றி விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.