Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

கூட்­ட­ர­சுக்கு ‘குட்­பாய்’!!

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் முடிவு மற்­றும் கூட்­ட­ர­சின் எதிர்­கா­லம் தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று அறி­விப்­பொன்றை விடுக்­க­வுள் ளார்.

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி படு­மோ­ச­மாக தோல்­வி­ய­டைந்­தி­ருந்­தது. அந்­தக் கட்­சி­யி­லுள்ள அமைச்­சர்­கள் பல­ரும் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன கட்­சி­யு­டன் இணைந்து செயற்­ப­ட­வுள்­ள­னர் என­வும், அமைச்சு பத­வி­யைத் துறந்து செயற்­ப­ட­வும் தயா­ரா­க­வுள்­ள­னர் என­வும் எச்­ச­ரித்­துள்ள நிலை­யி­லேயே கூட்­ட­ரசு தொடர்­பான அறி­விப்பை மைத்­திரி இன்று வெளி­யி­ட­வுள்­ளார்.

இதே­வேளை, அரச தலை­வர் ஊட­கப் பிரிவு நேற்று மாலை செய்­திக் குறிப்பை அனுப்பி வைத்­தி­ருந்­தது. அதில், உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் அதி­கா­ரங்­களை பெற்­றுக்­கொள்­ளல் அல்­லது அர­சின் எதிர்­கால செயற்­பா­டு­கள் தொடர்­பில் எது­வித தீர்­மா­னங்­களோ அல்­லது இணக்­கப்­பாடோ அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வுக்­கும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ வுக்­கும் இடை­யில் எட்­டப்­ப­ட­வில்லை என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.