Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

அரசமைப்புத் தொடர்பில் ஆராய்வது மிக அவசியம்!!

நடைபெற்று முடிந்­துள்ள உள்­ளூ­ராட்­சித் தேர்­தல், உரு­வாக்­கப்­பட்­டு­வ­ரும் புதிய அர­ச­மைப்­புத் தொடர் பாக வெளி­வந்­தி­ருந்த இடைக்­கால அறிக்­கை­யின் மீதான கருத்­துக்­க­ணிப்­பாக அமை­யும் என்று ஏற்­க­னவே கணிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றி­ருக்க, அர­ச­மைப்­பின் உரு­வாக்­கமும், அது தொடர்­பி­லான கோரிக்­கை­கள் மற்­றும் நிபந்­த­னை­க­ளும் மீண்­டும் பரி­சீ­லிக்­கப்­பட வேண்­டிய தேவை­யும் கட்­டா­ய­மும் உள்­ளது என்­பதை தமி­ழர் தாய­கத் தேர்­தல் முடி­வு­கள் வெளிப்­ப­டுத்­தி­யுள் ளன.

அர­ச­மைப்­பில், வடக்கு – கிழக்கு இணைந்த ஒன்­று­பட்ட இலங்­கைக்­குள் கூட்­டாட்சி அடிப்­ப­டை­யி­லான அதி­கா­ரப் பகிர்வை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக் கோரி­யி­ருந்­தது. அர­ச­மைப்­புத் தொடர்­பில், தாம் முன்­வைத் தி­ருந்த மூன்று கோரிக்­கை­க­ளில் அதி­கா­ரப் பகிர்­வை­யும் ஒன்­றாக நிலைநிறுத்­தி­யி­ருந்­தது கூட்­ட­மைப்பு.

ஆனால் தனி­நாடு என்ற கோரிக்­கையை அது முழு­மை­யா­கக் கைவிட்­டி­ருந்­தது. அதேவேளை, தமி­ழர் தேசம் அங்­கீ­க­ரிக்கப்படவேண்­டும். அத­னூ­டாக ஏனைய நகர்­வு ­கள், அதி­கா­ரப் பகிர்­வு­கள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கூட்­ட­மைப்பு பெரும்­பா­லான இடங்­க­ளில் பெரும்­பான்­மை­யைப் பதி­வு­செய்­தது. இத­னால் அதன் கோரிக்­கை­க­ளுக்கு தமிழ் மக்­கள் உடன்­பட்­டுச் செல்­கின்­ற­னர் என்றே அர்த்­தப்­ப­டு­கி­றது. மறு­மு­னை­யில் அகில இலங்கை தமி­ழ்க் காங்­கி­ரஸ் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­க­ளை­யும் இங்கே கவ­னத்­தில் கொள்­ளு­தல் அவ­சி­யம்.

கூட்­ட­மைப்­புத்­தான் பெரும்­பான்மை என்று காங்­கி­ரஸை ஒதுக்­கி­வி­டு­தல் ஆகாது. ஏனெ­னில், கடை­சி­யாக கடந்த 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் கிடைத்த வாக்­கு­க­ளை­யும் பார்க்க இந்­தத் தேர்­த­லில் நான்கு மடங்கு அதிக வாக்­கு­க­ளைப் பெற்­றுள்­ளது அந்­தக் கட்சி.

இது இமா­லய அடைவு என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. ஆக, தமி­ழர் தேசம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு அத­னூ­டாகவே அதி­கா­ரப் பகிர்­வுக­ளும் ஏனைய நகர்­வு­க­ளும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டும் என்­ப­தில் ஏரா­ள­மான தமிழ் மக்­கள் கொண்­டுள்ள பேர­வா­வின் வெளிப்­ப­டா­க­வும் காங்­கி­ர­சுக்கு ஏற்­பட்­டுள்ள இந்­தத் திடீர் ஆத­ர­வைக் கொள்­ள­மு­டி­யும்.

எனின், அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் மட்­டில் தமி­ழர்­க­ளின் விருப்­பம், எதிர்­பார்ப்பு ஆகி­யவை எவ்­வாறு தொடர்ந்து வெளிப்­ப­டுத்­தப்­ப­டப் போகி­றது என்­பது தொடர்­பில் எதிர்­பார்ப்பு எழவே செய்­கி­றது.

இரண்டு கட்­சி­க­ளும் ‘உடும்­புப்­பிடி’ என்ற நிலைப்­பாட் டில் நின்­று­வி­டா­மல், தத்­த­மது கோரிக்­கை­கள், கொள்­கை­க­ளைப் பொது­மைப்­ப­டுத்தி சாத­க­மா­னது எதுவோ, சரி­யா­னது எதுவோ, யதார்த்­த­மா­னது எதுவோ அதன்­படி செல்ல முன்­வர வேண்­டும். பரு­வ­கால மோதல்­க­ளை­யும், பரஸ்­ப­ரக் குற்­றச்­சாட்­டுக்­க­ளை­யும் தவிர்த்து அர­ச­மைப்­பின் உரு­வாக்­கத்­துக்­காக ஒரே குடை­யின் கீழ் உரத்து ஒலிக்க வேண்­டும்.

புதிய அர­ச­மைப்பு உரு­வா­னால், தமி­ழர் தாய­கம் உரு­வா­கும், மாகாண சபை­கள் நாடா­ளு­மன்­றங்­களை விட­வும் கூடு­தல் அதி­கா­ரம் பெற்­றுத் திக­ழும் என்­றெல்­லாம் விஷ­மப் பரப்­பு­ரை­களை முன்­னெ­டுத்­தி­ருந்த முன்­னாள் அரச தலை­வர் மகிந்­த­வுக்கு, உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கிடைத்த இமா­லய வெற்றி, தமி­ழர்­க­ளுக்­குச் சாத­க­மான அர­ச­மைப்பு சாத்­தி­ய­மில்லை என்ற செய்­தி­யையே சொல்­லா­மல் சொல்லி நிற்­கி­றது.

அதுவே வெளிப்­ப­டை­யா­ன­தும். இத்­த­கைய பின்­ன­ணி­யில் இது விட­யத்­தில் எம்­மி­டத்­தில் இரண்டு வேறு­பட்ட நிலைப்­பா­டு­கள் ஆகாது. அது எம்மை மேலும் பல­வீ­னப்­ப­டுத்­தும். புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கல் முயற்சி வர­லாற்று முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது. அந்த வகை­யில் மிகப்­பெ­ரும் வர­லாற்­றுக் கடமை ஒவ்­வொரு கட்­சிக்­கும் உள்­ளது என்­பதை அவை உண­ரத் தலைப்­பட வேண்­டும். அதுவே தமிழ் மக்­க­ளின் தேவை­யும், அவர்­க­ளின் எதிர்­பார்ப்­பும்­ கூட.