Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

அமெ­ரிக்கத் தாக்­கு­த­லில் தலி­பான்கள் உயிரிழப்பு!!

ஆப்­கா­னிஸ்­தா­னின் பர்­மல் பகு­தி­யில் அமெ­ரிக்கா நேற்­று­முன்­தி­னம் நடத்­திய வான் தாக்­கு­த­லில் தெக்­ரிக் – இ – தலி­பான் அமைப்­பைச் சேர்ந்த இரண்டு தலை­வர்­கள் உயி­ரி­ழந்­த­னர் என்று பாகிஸ்­தான் ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன.

தெக்­ரிக் – இ – தலி­பான் அமைப்­பின் துணைத் தலை­வர் கான் சேட் மெக்­சூத், அவ­ரது மைத்­து­னர், 2 பாது­கா­வ­லர்­கள் இந்­தத் தாக்­கு­த­லில் கொல்­லப்­பட்­ட­னர். 2011ஆம் ஆண்­டில் கராச்­சி­யில் மெக்­சூத் தாக்­கு­தல் நடத்­தி­ய­தில், 18 கடற்­படை அதி­கா­ரி­கள் கொல்­லப்­பட்­ட­னர்.

கைபர் பக்­துன்­கவா மாகா­ணத்­தின் பன்னு பகு­தி­யில் சிறைச்­சா­லையை உடைத்து 400 இற்­கும் மேற்­பட்ட கைதி­களை மெக்­சூத் விடு­தலை செய்­தார். மேலும், அமெ­ரிக்­கா­வால் பன்­னாட்­டுச் பயங்­க­ர­வா­தி­யாக மெக்­சூத் அறி­விக்­கப்­பட்­ட­வர் என்­பதும் குறிப்­பி­ டத்­தக்­கது.