Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

துருக்­கி­யின் உலங்­கு­வா­னூர்­தியை சுட்டு வீழ்த்­தி­யது குர்­திஷ் படை

துருக்கி நாட்­டுக்­குச் சொந்­த­மான இரா­ணுவ உலங்­கு­வா­னூர்­தியை சிரி­யா­வில் உள்ள குர்­திஷ் படை­யி­னர் சுட்டு வீழ்த்­தி­னர். இந்­தத் தாக்­கு­த­லில் துருக்­கி­யின் இரா­ணு­வச் சிப்­பாய்­கள் உயி­ரி­ழந்­த­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உள்­நாட்­டுப் போரா­லும், ஐ.எஸ். ஆயு­த­தா­ரி­க­ளின் ஆதிக்­கத்­தா­லும் நிலை­கு­லைந்து கிடக்­கும் சிரி­யா­வின் வட­மேற்கு பகு­தி­யில் இட்­லிப் மற்­றும் அரு­கா­மை­யில் உள்ள மாகா­ணங்­க­ளை­யொட்­டிய தங்­கள் நாட்டு எல்­லைப்­ப­கு­தி­யில் 12 கண்­கா­ணிப்பு முகாம்­களை துருக்கி அரசு அமைத்­துள்­ளது.

துருக்கி நாட்டு போர் வானூர்­தி­க­ளும் இரா­ணுவ உலங்­கு­வா­னூர்­தி­க­ளும் அவ்­வப்­போது சிரி­யா ­வுக்­குள் சென்று சிரிய அதி­பர் அசாத்­துக்கு எதி­ரா­கப் போரா­டி­வ­ரும் ஆயு­தக் குழு­வுக்கு எதி­ரா­கத் தாக்­கு­தல் நடத்தி வரு­கின்­றன.

அவ்­வாறு தாக்­கு­தல் நடத்­து­வ­தற்­காக நேற்­று­முன்­தி­னம் சென்ற உலங்கு வானூர்­தியே சுட்டு வீழ்த் தப்­பட்­டது. ‘‘இந்­தத் தாக்­கு­தலை ஏற்­றுக்­கொண்­டுள்ள துருக்கி அதி­பர் எர்­ட­கன், இதற்­கான விலையை குர்­திஷ் ஆயு­தக் குழு அனு­ப­விக்க வேண்டி வர­லாம்’’ என்று தெரி­வித்­தார்.