Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

மோடிக்கு வழங்­கப்­பட்­டது பலஸ்­தீன உயர் விருது!!

பலஸ்­தீ­னத்­தின் உயர் விரு­தான ‘கிரான்ட் கொலர்’ விருது இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடிக்கு வழங்­கப்­பட்­டது.

இந்­தி­யத் தலைமை அமைச்­சர் மோடி பலஸ்­தீ­னம், ஐக்­கிய அரபு இராச்­சி­யம், ஓமன் ஆகிய நாடு­க­ளுக்­குச் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். நேற்­று­முன்­தி­னம் பலஸ்­தீ­னத்­துக்­குச் சென்­றார். அங்­கு­வைத்து பலஸ்­தீன அதி­பர் அப்­பாஸ் இந்த விருதை மோடிக்கு வழங்­கி­னார்.

பலஸ்­தீ­னத்­தி­டம் இருந்து கிழக்கு ஜெரு­ச­லேமை ஆக்­கி­ர­மித்து வைத்­துள்­ளது இஸ்­ரேல். இஸ்­ரேல் ஜெரு­ச­லேமை தனது தலை­ந­க­ராக ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­தது. ஆனால் எந்த நாடும் இந்த அறி­விப்பை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

இந்த நிலை­யில் இஸ்­ரே­லின் தலை­ந­கர் ஜெரு­ச­லேமே என்று கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்­னர் அறி­வித்­தார் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப். ட்ரம்­பின் இந்த அறி­விப்­புக்கு இந்­தியா கடும் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யது.

ஐ.நா. பொதுச் சபை­யில் இடம்­பெற்ற வாக்­குப் பதி­வி­லும் அமெ­ரிக்­கா­வின் தீர்­மா­னத்­துக்கு எதி­ரா­க­வும் பலஸ்­தீ­னத்­துக்கு ஆத­ர­வா­க­வுமே இந்­தியா வாக்­க­ளித்­தது. இந்­தப் பின்­ன­ணி­யி­லேயே மோடிக்கு இந்த விருது வழங்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.