Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

ஐ.தே.க தலைமைக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க்கொடி ?

கொழும்பு அரசியல் வட்டாரங்களில் தகவல் கசிவு

17 ஆண்டுகளாக எதிர்க்கட்சியிலிருந்து விட்டு கட்சி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பை வீணாக்கி ஐக்கிய தேசியக் கட்சி யைத் தாரைவார்த்த ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது முறையாகவும் கட்சியை யும் ஆதரவாளர்களையும் நிர்க்கதிக்குள்ளாக்கி யுள்ளார்.

அவர் உடனடியாகப் பதவி விலகிப் பொருத்தமான ஒருவருக்குத் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அந்தக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் 42 பேர் இணைந்து கையொப்பமிட்ட கடிதம் கட்சியின் செயலர் அமைச்சர் கபீர் காசீமிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்தக் கடிதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரு அமைச்சர்கள் 4 பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கையெழுத்திட்டுள்ளதுடன் மாகாண சபை உறுப்பினர்களின் கையெழுத்துக்களும் பெறப்படவுள்ளன.