Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

வடக்கு மாகாணத்தில் 63 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்!!

மகளிர் விவகார அமைச்சின் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது

வடக்கு மாகா­ணத்­தில் 63 ஆயி­ரம் பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளுக்கு வாழ்­வா­தார உத­வி­களை வழங்­கு­வ­தற்கு நிதி தேவை என்று மாகாண மக­ளிர் விவ­கார அமைச்­சின் ஆண்­டுக்­கான புள்­ளி­வி­வ­ரங்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:
வடக்கு மாகா­ணத்­தில் சமூ­க­ சே­வைகள் திணைக்­க­ளத்­தின் தர­வின் அடிப்­ப­டை­யில் பெண்­த­லை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளின் எண்­ணிக்கை யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 36 ஆயி­ரத்து 334, கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 8ஆயி­ரத்து 435, முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 5ஆயி­ரத்து 961, வவு­னியா மாவட்­டத்­தில் 6ஆயி­ரத்து 712, மன்­னார் மாவட்­டத்­தில் 5ஆயி­ரத்து 903 என வடக்கு மாகா­ணத்­தில் 63ஆயி­ரத்து 345 பெண்­த­லை­மைத்­துவக் குடும்­பங்­கள் உள்­ளன.

இது வடக்கு மாகா­ணத்­தி­லுள்ள மொத்­தக் குடும்­பங்­க­ளில் 16.66 சத­வீ­த­மா­க­வுள்­ளது. நடப்பு வரு­டத்­தில் கிடைத்த நிதிக்கு அமை­வாக 9.50 மில்­லி­யன் ரூபா செல­வில் 187 பெண் தலை­மைத்­துவக் குடும்­பங்­க­ளுக்கு மாத்­தி­ரமே வாழ்­வா­தார உத­வி­கள் வழங்­கப்­பட்­டன.

போருக்­குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யில்; பாதிப்­புக்­குள்­ளாக்­கப்­பட்ட பெண்­கள், பாதிப்­புக்­குள்­ளா­கக்­கூ­டிய பெண்­கள், மாற்­று­வ­லு­வுள்ள பெண்­கள், மற்­றும் முன்­னாள் போரா­ளி­கள் என பல­
த­ரப்­பட்­ட­வர்­கள் உள்­ள­னர். இவர்­க­ளுக்­கான வாழ்­வா­தார உத­வி­கள் வழங்­கு­வது அவ­சி­யம்.

மக­ளிர் விவ­கா­ரத்­துக்கு தனி­யான திணைக்­க­ளம், நிதி இல்லை. ஆனால் அமைச்­சுக்கு கிடைக்­கும் நிதி­யில் இவர்­க­ளுக்­கான வாழ்­வா­தார உத­வி­கள் வழங்­கும் செயற்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன என்று சுட்­டிக்­காட்டப்­பட்
டது.