Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

யாழில் அமைதியான முறையில்   நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் 

நன்றி தெரிவித்தார் மாவட்டச் செயலர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் அமைதியாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் என்னுடைய நன்றிகள். இவ்வாறு யாழ்.மாவட்டச் செயலர் நா.வேதநாயன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,

யாழ்.மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றிருந்தது. இந்த ஒத்துழைப்புக்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட பொலிஸார் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்தத் தருணத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தலின் போது யாழ்.மாவட்டத்தில் ஒரு சில சிறிய தேர்தல் விதி முறை மீறல்கள் இடம்பெற்றது. எனினும் பாரிய சம்பவங்கள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை.

தேர்தல் தினத்தன்று அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்றது. பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்தமையை அவதானிக்க முடிந்தது. என்றார்.