Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

அந்தமான் தீவில் நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6-ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள்சேதம் மற்றும் உயிர்சேதம் பற்றிய தகவல்கள் உடனடியாக வெளிவரவில்லை.
ரிக்டர் அளவில் 6- க்கும் அதிகமாக நிலநடுக்கம் ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளன. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த ஜனவரி 14 ஆம் திகதி அன்று அந்தமான் தீவுகளில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.