இறந்த தாயுடன் உறங்கிய சிறுவன்!!

தனது தாயார் உயிரிழந்தமை தெரியாத 5 வயதுச் சிறுவன், அவர் அருகில் படுத்து உறங்கிய சம்பவம் பலரது மனதையும் உலுக்கியது.

இந்தச் சம்பவம் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஓஸ்மானியா அரசு மருத்துவமனையில் நடந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் தாயை அனுமதித்த 5 வயது சிறுவன், சிறிது நேரத்துக்கு பின் அவர் இறந்தது அறியாமல் அவர் அருகே தூங்கினார். இது பார்த்தவர்களுக்கு கண்ணீரை வரவழைத்தது.

ஹைதராபாத் நகரில் உள்ள ஓஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில், இளம் தாயும், அவரின் 5 வயது மகனும் வந்தனர். வேறுயாரும் உதவிக்கு வரவில்லை.

மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்குச் சென்ற அந்தப் பெண் தன்னால் சுவாசிக்கச் சிரமமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரின் நிலையைக் கண்ட மருத்துவர்கள், அந்தப் பெண் இதய நோய் பிரச்சினையில் சிக்கி இருப்பதை அறிந்து உடனடியாக செயற்கை சுவாசத்துக்கு ஏற்பாடு செய்து, சிகிச்சை அளித்தனர்.

ஆனால், மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தும், 30 நிமிடங்களில் அந்த இளம் தாய் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
ஆனால், தனது தாய் இறந்து விட்ட துயரமான சம்பவம் நடந்தது தெரியாமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த 5 -வயதுச் சிறுவன் தனது தாயின் அருகே படுத்து சிறிது நேரத்தில் தூங்கி விட்டான்.

சிறிது நேரத்துக்குப் பின் அறைக்கு வந்து பார்த்த மருத்துவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இந்தக் காட்சி அவர்களுக்கு கண்ணீரை வரவழைத்துவிட்டது. அதன்பின், அங்கிருந்த பிற நோயாளிகளின் உறவினர்கள் அந்தச் சிறுவனை எழுப்பி தங்கள் வசம் வைத்துக் கொண்டனர்.

இதையடுத்து உதவும் கரங்கள் எனும் தொண்டு நிறுவனத்தின் அதிகாரி முஸ்தபா ஹசன் அஸ்காரியிடம் இளம் பெண்ணின் உறவினர்களைக் கண்டுபிடிக்க மருத்துவர்கள் கூறினர்.

அந்த அமைப்பினர் மேற்கொண்ட விசாரணையில், அவரது கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அவரை விட்டுச் சென்றுவிட்டார். தற்போது அந்தப் பெண் வேறுஒ ரு நபருடன் ராஜேந்திரா நகரில் வசித்து வந்துள்ளார் என்று தெரியவந்தது.

பொலிஸாரின் உதவியுடன்,பெண்ணின் பெற்றோரைக் கண்டுபிடித்தனர். அவர்களிடம் மகள் இறந்த தகவலைக் கூறி, மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அந்தச் சிறுவனையும் மருத்துவமனை நிர்வாகம் தாயின் பெற்றோரிடம் ஒப்படைத்தது.

You might also like