Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

தேர்தலில் வெற்றிபெற்ற ஆதிவாசி பெண்!!

இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு 1369 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றார் அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய – ஹேனானிகல வடக்கைச் சேர்ந்த 37 வயதுடைய ஆதிவாசிப் பெண்.

ஆதிவாசிப் பெண்ணான டபிள்யூ.எம். ஷிலோமாலா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிகளவான பெண்கள் போட்டியிட்ட முதலாவது உள்ளூராட்சி சபைத் தேர்தல் இதுவாகவும் கருதப்படுகிறது.