Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

யாழ். இந்துக் கல்லூரி அரையிறுதிக்குத் தகுதி!!

யாழ்ப்­பாண மாவட்ட பாட­சா­லை­கள் துடுப்­பாட்­டச் சங்­கம் நடத்­தும் 13 வய­துப்­பி­ரிவு அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி மைதா­னத்­தில் அண்­மை­யில் இடம்­பெற்ற காலி­று­தி­யாட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி 50 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 161 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக கிரி­சாந் 36 ஓட்­டங்­க­ளை­யும், பிர­சாந் 26 ஓட்­டங்­க­ளை­யும், சயந்­தன் 16 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி­யின் சார்­பில் கஜன், பிரி­யந்­தன் ஆகி­யோர் தலா 3 இலக்­கு­களை வீழ்த்­தி­னர்.
பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி 32 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. அதி­க­பட்­ச­மாக யோகி­சன் 52 ஓட்­டங்­க­ளை­யும், கவி­வர்­மன் 38 ஓட்­டங்­க­ளை­யும், பிரி­யந்­தன் 19 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் நியூட்­டன், கிரி­சாந், யுவேன்,சயந்­தன் ஆகி­யோர் தலா 2 இக்குகளை வீழ்த்தினர்.