Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

இன்றைய மோதல்கள்!!

முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான தொடரின் ஆட்டங்கள் இரணைப்பாலை சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.

இந்தத் தொடரில் இன்று இடம்பெறும் காலிறுதியாட்டங்களில் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் செல்வபுரம் சந்திரன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து உடுப்புக்குளம் அலையோசை விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது.

மாலை 4 மணிக்கு இடம்பெறும் இரண்டாவது காலிறுதியாட்டத்தில் முல்லைத்தீவு சென். யூட் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து ஆனந்தபுரம் அண்ணா விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது.