Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

ஆஸி. கிரிக்கெட் சபையின் அலன் போர்டர் விருதுகள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் சார்­பில் வழங்­கப்­ப­டும் உய­ரிய விரு­தான அலன் போர்­டர் விரு­து­கள் நேற்று வழங்­கப்­பட்­டன. சிறந்த டெஸ்ட் வீர­ராக ஸ் ரீவ் சிமித் தெரி­வு ­செய்­யப்­பட்­டார்.

இந்த வரு­டத்துக்கான விழா மெல்­.பேர்ன் நக­ரில் நேற்று நடை­பெற்­றது. சிறந்த டெஸ்ட் வீர­ருக்­கான விருதை தன­தாக்­கி­னார் ஸ் ரீவ் சிமித். நாதன் லைய­னுக்­கும், சிமித்­துக்­கும் இடையே கடும் போட்டி நில­வி­யது. 6 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் விரு­தைத் தன­தாக்­கி­னார் சிமித்.

ஒரு­நாள் ஆட்­டங்­க­ளுக்­கான சிறந்த வீரர் விருதை டேவிட் வோர்­ண­ரும், சிறந்த ரி-–20 வீர­ராக ஆரோன் பின்ஞ்­சும் தெரி­வா­கி­னர். சிறந்த வீராங்­க­ னைக்­கான விருதை எலிசே பெர்ரி பெற்­றுள்­ளார்.