Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பீற்றர்ஸ், லூட்ஸ் அணிகள் வெற்றி

நாவாந்துறை கலைவாணி விளையாட்டுக் கழகம் நடத்தும் அணிக்கு 7 வீரர்கள் பங்கு பற்றும் கால்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற ஆட்டங்களில் சென். பீற்றர்ஸ், லூட்ஸ் அணிகள் வெற்றிபெற்றன.

கலைவாணி விளை யாட்டுக் கழக மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் சென். பீற்றர்ஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து அரியாலை ஐக்கியம் அணி மோதியது. 4:2 என்ற கோல் கணக்கில் சென். பீற்றர்ஸ் அணி வெற்றிபெற்றது.

தொடர்ந்து இடம்பெற்ற ஆட்டத்தில் இளவாலை சென். லூட்ஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து உரும்பிராய் சரஸ்வதி விளையாட்டுக்கழக அணி மோதிய ஆட்டத்தில், சென். லூட்ஸ் விளையாட்டுக் கழக அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.