Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

சொசைற்ரெட்டை வீழ்த்தியது ரியல்!!

ஸ்பானி­யக் கால்­பந்­தாட்­டக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான லா லிகா தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் ரியல் சொசைற்­ரெட்டை வீழ்த்­தி­யது ரியல் மட்­ரிட்.

ஆட்­டத்­தின் முத­லா­வது நிமி­டத்­தி­லேயே மட்­ரிட்­டின் முதல் கோலைப் பதி­வு­செய்­தார் லூகாஸ். 27ஆவது நிமி­டத்­தில் மட்­ரிட்­டின் இரண்­டா­வது கோலைப் பதி­வு­செய்­தார் ரொனால்டோ. 34ஆவது நிமி­டத்­தில் ரொனி குறூஸ் பதி­வு­செய்த கோலின் மூலம் மட்­ரிட் 3:0 என்று முன் னிலை பெற்­றது. 37ஆவது நிமி­டத்­தில் ரொனால்டோ மற்­றொரு கோலைப் பதி­வு ­செய்ய முதல் பாதி­யின் முடி­வில் 4:0 என்ற கோல் கணக்­கில் முன்­னிலை பெற்­றது மட்­ரிட்.

74ஆவது நிமி­டத்­தில் பேடிஸ்டா ஒரு கோலை­யும், 83ஆவது நிமி­டத்­தில் இர்­ம­னன்டி மற்­றொரு கோலை­யும் ரியல் சொசைற்­ரெட் சார்­பா­கப் பதி­வு­செய்­த­னர். 86ஆவது நிமி­டத்­தில் தனது மூன்­றா­வது கோலை­யும் அணி­யின் ஐந்­தா­வது கோலை­யும் பதி­வு­செய்­தார் ரொனால்டோ. முடி­வில் 5:2 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது ரியல் மட்­ரிட்.