Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

முதலிடம் பிடிப்பதே தற்போது நோக்கம்

பெடரர் வெளிப்படை

பன்­னாட்டு ரென்­னிஸ் தரப்­ப­டுத்­த­லில் முத­லி­டம் பிடிப்­பதே இந்த வரு­டத்­தில் எனது நோக்­கம் என்று தெரி­வித்­தார் சுவிற்­சர்­லாந்­தின் ரென்­னிஸ் ஜாம்­ப­வான் றோயர் பெட­ரர்.

பன்­னாட்­டுத் தரப்­ப­டுத்­த­லில் ஸ்பெய்­னின் வீரர் ரபேல் நடால் முத­லி­டத்­தில் உள்­ளார். பெட­ரர் இரண்­டா­வது இடத்­தில் உள்­ளார். நெதர்­லாந்து ரென்­னிஸ் தொடர் நேற்­று­முன்­தி­னம் ஆரம்­ப­மா­னது.

இந்­தத் தொட­ரில் அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றால் நடா­லைப் பின்­தள்ளி முத­லி­டம் பிடிப்­பார் பெட­ரர். இதை­ய­டுத்­துக் கருத் துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘கடந்த வரு­டத்­தின் இறு­திப் பகு­தி­யி­லேயே, 2018ஆம் ஆண்டு நிறை­வ­டை­ வ­தற்­குள் முத­லி­டம் பிடிப்­பது எனது திட்­டம் என்று நான் தெரி­வித் தேன். அந்­தத் திசை­யி­லேயே நான் சென்­று­கொண்டிருக்­கி­றேன். இன்­னும் ஓரிரு முக்­கிய கிண்­ணங்­க­ளைக் கைப்­பற்­றி­விட்­டால் தரப்­ப­டுத்­த­லில் முத­லி­டம் பிடிக்­க­லாம்’’ என்று பெட­ரர் மேலும் தெரி­வித்­தார்.

பெட­ர­ருக்கு தற்­போது 36 வயது. தரப்­ப­டுத்­த­லில் முத­லி­டம் பிடித்­தால் அதிக வய­தில் முத­லி­டம் பிடித்த ரென்­னிஸ் வீரர் என்ற சிறப்பை யும் அவர் பெறு­வார்.