Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

உலகக்கிண்ணத் தொடரில் ஆஸியின் இரக்கம் இல்லாத ஆட்டம் தொடரும்

அடுத்த வரு­டம் நடை­பெ­ற­வுள்ள உல­கக்­கிண்­ணத் தொட­ரில் ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் ஆக்­ரோ­ச­மான ஆட்­டம் இரக்­கம் இல்­லாத வகை­யில் தொட­ரும். அதற்­கேற்ப அணி­யில் பல மாற்­றங்­கள் செய்­யப்­ப­டும் என்று தெரி­வித்­தார் ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் தலை­மைப் பயிற்­சி­யா­ளர் லீமன்.

‘முடி­வு­கள் என்­பது திட்­டங்­களை எவ்­வாறு செயற்ப­டுத்­து­வது என்­ப­தில்­தான் உள்­ளது. டெஸ்­டில் என்ன நடக்­கி­றது என்­ப­தை­யும், டெஸ்ட் அல்­லாத வடி­வத்­துக்­குத் திரும்­பும்­போது சில­ரை­யும் நீக்கி, ஆக்­ரோ­ச­மான மாற்­றங்­க­ளைக் கொண்­டு­வர வேண்­டும். டெஸ்ட் ஆட்­டங்­க­ளில் கவ­னம் செலுத்­தி­ய­தால் ஒரு­நாள் ஆட்­டங்­க­ளில் நிலை­யான ஒரு அணி அமை­யா­மல் போனது. எனவே அடுத்த 6 மாதங்­க­ளுக்கு நிலை­யான ஒரு அணி விளை­யா­டு­வ­தைப் பார்க்க விரும்­பு­கி­றேன். இதன் அடிப்­ப­டை­யி­லேயே அணி­யைக் கட்­ட­மைக்கத் திட்­ட­ மிட்டுள்ளோம்.

அணி­யின் அணு­கு­முறை மாறும், இங்­கி­லாந்து ஆடு­க­ளங்­கள் துடுப்­பாட்ட வீரர்­க­ளுக்­குச் சாத­க­மாக உள்­ளன, அதே வேளை­யில் திரும்­பல் தன்­மை­யுள்ள பந்­து­வீச்­சுக்­கும் முக்­கி­யத்­து­வம் இருக்­கும். ஒரு நிச்­ச­ய­மான அணு­கு­முறை தேவை­தான். ஆனால் சூழ்­நி­லை­க­ளைப் பொறுத்து மாறிக் கொள்­ள­வும் வேண்­டும். தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான தொடர் முடிந்­த­வு­டன் நாங்­கள் அமர்ந்து சில முடி­வு­களை எடுக்­க­வி­ருக்­கி­றோம்.

உல­கக்­கிண்­ணத் தொடர் விரை­வில் வந்­து­வி­டும். அதற்கு முன் 22 ஒரு­நாள் ஆட்­டங்­கள்­தான் உள்­ளன. எனவே இதற்­குத் தக்­க­வாறு அணியை உரு­வாக்­கித் தயார்ப்படுத்த வேண்­டும்’ என லீமன் மேலும் தெரி­வித்­தார்.