Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

காதலர் தினத்தால் பல்கலைக் கழகத்துக்கு பூட்டு!!

காதலர் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் எவரும் உள் நுழையக் கூடாது என்று லக்னோ பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

“மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட சில மணவர்கள் பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்கலைக் கழகத்துக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. எந்தச் சிறப்பு வகுப்பும் நடைபெறாது.
எனவே மற்ற மாணவர்கள் யாரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நாளை வரக்கூடாது. மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உட்கார்ந்திருந்தாலோ நடமாடினாலோ அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.