மீரா ஜாஸ்மினைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

‘சண்டக்கோழி’, ‘ரன்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துப் பெயர் பெற்றவர்.

சினிமாவை விட்டு விலகிய அவர் திருமணம் செய்த பின்னர் நடிப்பதை நிறுத்தினார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நகைக்கடையில் மீரா ஜாஸ்மினைப் பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

எளிதில் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை அதிகரித்திருந்தது. சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

‘சண்டக்கோழி’, ‘ரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த இவர் ‘புதிய கீதை’ படத்தில் விஜய்யுடனும், ‘ஆஞ்சநேயா’ படத்தில் அஜித்துடனும் நடித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற நடிகை தமிழில் கடைசியாக, சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்த ‘இங்க என்ன சொல்லுது’ படத்திலும், விஞ்ஞானி படத்திலும் நடித்திருந்தார். தேசிய விருது, தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளின் மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார் மீரா ஜாஸ்மின்.

கடந்த 2014 ஆ-ம் ஆண்டு இவர் திருமணம் செய்து கொண்டாலும் கூட, மற்ற சில நடிகைகளைப் போல சினிமாவை விட்டு முழுவதுமாக ஒதுங்கி விடாமல் அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டி வருகிறார்.

பொலிவூட் இயக்குனர் அஜய் வர்மா என்பவர் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் ‘நீராளி’ படத்தில் அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்க இருப்பதாகத் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்தத் தகவலைப் படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

You might also like