Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் படையினர் சிறப்பு வழிபாடு!!

இந்துக்களின் சிறப்பு தினமான சிவராத்திரியை முன்னிட்டு படையினரால் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று சிறப்புப் பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

வன்னி படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டது. வன்னிப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த படை அதிகாரிகள், படையினர் எனப் பலரும் சீருடையுடன் கலந்து கொண்டனர்.

நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வழிபாடுகளை மேற்கொண்டு பொங்கல் உண்டனர். அதில் ஆலயக் குருக்கள், ஆலய நிர்வாகத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.